October 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 25

0

Today Special Historical Events In Tamil | 25-10 | October 25

October 25 Today Special | October 25 What Happened Today In History. October 25 Today Whose Birthday (born) | October -25th Important Famous Deaths In History On This Day 25/10 | Today Events In History October-25th | Today Important Incident In History | ஐப்பசி 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-10 | ஐப்பசி மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.10 Varalatril Indru Nadanthathu Enna| October 25 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 25/10 | Famous People Born Today October 25 | Famous People died Today 25-10.

  • Today Special in Tamil 25-10
  • Today Events in Tamil 25-10
  • Famous People Born Today 25-10
  • Famous People died Today 25-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-10 | October 25

    முதலாம் போன்பாசு விழாவாக‌ கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்கம்)
    இறைமை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சுலோவீனியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-10 | October 25

    473ல் பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார்.
    1147ல் செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
    1147ல் நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர்.
    1415ல் நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர்.
    1616ல் அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் டேர்க் ஆர்ட்டொக் பெற்றார். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஆர்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
    1760ல் மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.
    1900ல் ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் குடியேற்றத்தை (இன்றைய தென்னாப்பிரிக்காவில்) இணைத்துக்கொண்டது.
    1917ல் உருசியாவில் அக்டோபர் புரட்சி (பழைய யூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
    1918ல் அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்கியதில் 353 பேர் உயிரிழந்தனர்.
    1920ல் இங்கிலாந்தின் பிரிக்சுடன் சிறையில் 74 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சின் பெயின் கோர்க் பிரபு டெரன்சு மெக்சுவீனி இறந்தார்.
    1924ல் இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
    1927ல் இத்தாலியப் பயணிகள் கப்பல் பிரின்சிபெசா மபால்டா பிரேசிலில் மூழ்கியதில் 314 பேர் உயிரிழந்தனர்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கப்பலில் இருந்த நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் மூழ்கியது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.
    1945ல் சப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.
    1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.
    1971ல் ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    1973ல் இசுரேல்-எகிப்து இடையிலான யோம் கிப்பூர்ப் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
    1983ல் கிரெனடா பிரதமரும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இராணுவப் புரட்சியை அடுத்துத் தூக்கிலிடப்பட்ட ஆறாவது நாள் ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.
    1995ல் அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் தொடருந்து ஒன்று மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர்.
    1995ல் கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.
    1997ல் உள்நாட்டுப் போரை அடுத்து அரசுத்தலைவர் பாசுக்கால் லிசூபா பிராசவில்லி நகரை விட்டு வெளியேறியதை அடுத்து டெனிசு இங்குவேசோ காங்கோ குடியரசின் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
    2000ல் பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    2001ல் விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
    2001ல் இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக போட்டோ என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.
    2007ல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.
    2009ல் பகுதாது நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
    2017ல் சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19-வது தேசியப் பேராயத்தில் சீ சின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-10 | October 25

    1789ல் செருமனிய வானியலாளரான‌ சாமுவேல் சுகுவாபே பிறந்த நாள். (இறப்பு-1875)
    1806ல் செருமானிய மெய்யியலாளரான‌ மக்சு இசுரேனர் பிறந்த நாள். (இறப்பு-1856)
    1811ல் பிரான்சியக் கணிதவியலாளரான‌ எவரிஸ்ட் கால்வா பிறந்த நாள். (இறப்பு-1832)
    1881ல் எசுப்பானிய ஓவியரும் சிற்பக் கலைஞருமான‌ பாப்லோ பிக்காசோ பிறந்த நாள். (இறப்பு-1973)
    1912ல் கருநாடக இசைப் பாடகரான‌ மதுரை மணி ஐயர் பிறந்த நாள். (இறப்பு-1968)
    1929ல் அமெரிக்க வானியற்பியலாளரான‌ ஜார்ஜ் பீல்டு பிறந்த நாள்.
    1939ல் மலையாள நாட்டுப்புறவியலாளரான‌ எம். வி. விஷ்ணு நம்பூதிரி பிறந்த நாள்.
    1950ல் இந்திய குருவும் கல்வியாளரும் சமற்கிருத அறிஞரும் பன்மொழியாளருமான‌ ராமபத்ராச்சார்யா பிறந்த நாள்.
    1955ல் தமிழக எழுத்தாளரான‌ சுப்ரபாரதிமணியன் பிறந்த நாள்.
    1975ல் ஆங்கிலேய நூலாசிரியரான‌ ஸேடி ஸ்மித் பிறந்த நாள்.
    1984ல் அங்கேரிய சதுரங்க ஆட்ட வீரரான‌ திசியா காரா பிறந்த நாள்.
    1984ல் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான‌ கேட்டி பெர்ரி பிறந்த நாள்.
    1893ல் இலங்கை நீதிபதியான‌ செ. நாகலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1958)
    1953ல் இலங்கை எழுத்தாளரான‌ வதிரி. சி. ரவீந்திரன் பிறந்த நாள்.
    1972ல் பிரான்சியப் பொருளாதார அறிஞரான‌ எஸ்தர் டுஃப்லோ பிறந்த நாள்.
    1973ல் இலங்கை துடுப்பாட்ட வீரரான‌ றசல் ஆர்னோல்ட் பிறந்த நாள்.
    1997ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ துளசி நாயர் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 25-10 | October 25

    1400ல் ஆங்கிலேய மெய்யியலாளரான‌ ஜெஃப்ரி சாசர் இறப்பு நாள். (பிறப்பு-1343)
    1949ல் ஆங்கிலேய வானியலாளரான‌ மேரி அக்வர்த் எவர்ழ்செடு இறப்பு நாள். (பிறப்பு-1867)
    1955ல் அணுகுண்டினால் பாதிப்படைந்த சப்பானியரான‌ சடாகோ சசாகி இறப்பு நாள். (பிறப்பு-1943)
    1958ல் இலங்கை நீதிபதியான‌ செ. நாகலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1958)
    1975ல் வங்காளக் கவிஞரான‌ காளிதாஸ் ராய் இறப்பு நாள். (பிறப்பு-1889)
    1999ல் இந்திய இசையமைப்பாளரும் பல்வாத்தியக் கலைஞரும் பாடகருமான‌ எஸ். ராஜேஸ்வர ராவ் இறப்பு நாள். (பிறப்பு-1922)
    2012ல் இந்திய நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான‌ ஜஸ்பால் பட்டி இறப்பு நாள். (பிறப்பு-1955)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 24
    Next articleஇன்றைய ராசி பலன் 24.09.2022 Today Rasi Palan 24-09-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!