October 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 21

0

Today Special Historical Events In Tamil | 21-10 | October 21

October 21 Today Special | October 21 What Happened Today In History. October 21 Today Whose Birthday (born) | October -21st Important Famous Deaths In History On This Day 21/10 | Today Events In History October-21st | Today Important Incident In History | ஐப்பசி 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-10 | ஐப்பசி மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.10 Varalatril Indru Nadanthathu Enna| October 21 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 21/10 | Famous People Born Today October 21 | Famous People died Today 21-10.

  • Today Special in Tamil 21-10
  • Today Events in Tamil 21-10
  • Famous People Born Today 21-10
  • Famous People died Today 21-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-10 | October 21

    இந்தியக் காவலர் நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-10 | October 21

    1097ல் முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.
    1209ல் நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
    1520ல் பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
    1805ல் நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
    1824ல் யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.
    1833ல் இலங்கையில் புதிய மீயுயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
    1854ல் புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.
    1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் “எட்வேர்ட் பேக்கர்” கொல்லப்பட்டார்.
    1876ல் யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
    1879ல் தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.
    1892ல் உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
    1895ல் சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
    1931ல் சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.
    1943ல் சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் கலினின்கிராதில் செருமனியக் குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல் ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.
    1945ல் பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
    1956ல் கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.
    1959ல் வெர்னர் வான் பிரவுன் உடபப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் உத்தரவை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் பிறப்பித்தார்.
    1966ல் வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..
    1969ல் சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.
    1971ல் இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.
    1983ல் நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
    1987ல் யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.
    1994ல் சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
    2005ல் குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-10 | October 21

    1328ல் சீனப் பேரரசரான‌ கோங்வு பிறந்த நாள். (இறப்பு-1398)
    1772ல் ஆங்கிலேயக் கவிஞரும் மெய்யியலாளருமான‌ சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் பிறந்த நாள். (இறப்பு-1834)
    1790ல் பிரான்சியக் கவிஞரும் அரசியல்வாதியுமான‌ அல்போன்சு டி லாமார்ட்டின் பிறந்த நாள். (இறப்பு-1869)
    1833ல் சுவீடன் வேதியியலாளரும் நோபல் பரிசை ஆரம்பித்தவருமான‌ ஆல்பிரட் நோபல் பிறந்த நாள். (இறப்பு-1896)
    1877ல் கனடிய-அமெரிக்க மருத்துவருமான‌ ஓஸ்வால்ட் அவேரி பிறந்த நாள். (இறப்பு-1955)
    1898ல் பிரித்தானிய மெய்யியலாளரும் இறை உணர்வாளருமான‌ உலகப் பயணி பால் பிராண்டன் பிறந்த நாள். (இறப்பு-1981)
    1911ல் அமெரிக்க ஓவியரான‌ மேரி பிளேர் பிறந்த நாள். (இறப்பு-1978)
    1921ல் இடச்சு வானியலாளரான‌ இங்கிரிடு கிரோயெனவெல்டு பிறந்த நாள். (இறப்பு-2015)
    1925ல் இந்திய அரசியல்வாதியான சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த நாள்.
    1929ல் அமெரிக்க எழுத்தாளரான‌ அர்சலா கே. லா குவின் பிறந்த நாள்.
    1931ல் இந்திய நடிகரான‌ சம்மி கபூர் பிறந்த நாள். (இறப்பு-2011)
    1936ல் இந்திய அரசியல்வாதியும் ஜம்மு-சாசுமீர் முதலமைச்சருமான பாரூக் அப்துல்லா பிறந்த நாள்.
    1937ல் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ தேங்காய் சீனிவாசன் பிறந்த நாள். (இறப்பு-1988)
    1940ல் ஆங்கிலேயத் துடுப்பாளரான‌ ஜெப்ரி போய்கொட் பிறந்த நாள்.
    1942ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ் பிறந்த நாள்.
    1943ல் பாக்கித்தான் வரலாற்றாளரும் நூலாசிரியருமான‌ தாரிக் அலி பிறந்த நாள்.
    1944ல் பிரான்சிய வேதியியல் ஆய்வாளரான‌ இழான் பியர் சோவாழ்சு பிறந்த நாள்.
    1949ல் இசுரேலின் 9வது பிரதமரான‌ பெஞ்சமின் நெத்தனியாகு பிறந்த நாள்.
    1958ல் நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளரான‌ ஆந்தரே கெய்ம் பிறந்த நாள்.
    1969ல் தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான‌ வேல்ராஜ் பிறந்த நாள்.
    1978ல் தமிழக நடிகையும் வடிவழகியும் பின்னணிப் பாடகியுமான‌ சங்கீதா கிரிஷ் பிறந்த நாள்.
    1980ல் அமெரிக்க நடிகையான‌ கிம் கர்தாசியன் பிறந்த நாள்.
    1982ல் அமெரிக்க நடிகரான‌ மாட் டல்லாஸ் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 21-10 | October 21

    1805ல் ஆங்கிலேயத் தளபதியான‌ ஹோரஷியோ நெல்சன் இறப்பு நாள். (பிறப்பு-1758)
    1835ல் இந்தியப் புலவரும் கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவருமான‌ முத்துசுவாமி தீட்சிதர் இறப்பு நாள். (பிறப்பு-1775)
    1949ல் கொலம்பிய கத்தோலிக்கப் புனிதரான‌ புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா இறப்பு நாள். (பிறப்பு-1874)
    1967ல் தென்மார்க்கு வேதியியலாளரும் வானியலாளருமான‌ எய்னார் எர்ட்சுபிரங்கு இறப்பு நாள். (பிறப்பு-1873)
    1984ல் இந்திய மருத்துவரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான‌ டி. எஸ். சௌந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1904)
    2002ல் அமெரிக்க வானியலாளரான‌ யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் இறப்பு நாள். (பிறப்பு-1909)
    2010ல் இந்தியக் கவிஞரான‌ அய்யப்பன் இறப்பு நாள். (பிறப்பு-1949)
    2012ல் இந்திய இயக்குநரான யஷ் சோப்ரா இறப்பு நாள். (பிறப்பு-1932)
    2014ல் ஆத்திரேலியாவின் 21வது பிரதமரான‌ கஃப் விட்லம் இறப்பு நாள். (பிறப்பு-1916)
    2015ல் தமிழக எழுத்தாளரும் திறனாய்வாளருமான‌ வெங்கட் சாமிநாதன் இறப்பு நாள்.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 20
    Next articleOctober 22 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 22