Today Special Historical Events In Tamil | 20-10 | October 20
October 20 Today Special | October 20 What Happened Today In History. October 20 Today Whose Birthday (born) | October -20th Important Famous Deaths In History On This Day 20/10 | Today Events In History October-20th | Today Important Incident In History | ஐப்பசி 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-10 | ஐப்பசி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.10 Varalatril Indru Nadanthathu Enna| October 20 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 20/10 | Famous People Born Today October 20 | Famous People died Today 20-10.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-10 | October 20
புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (குவாத்தமாலா)
உலகப் புள்ளியியல் நாளாக கொண்டாடப்படுகிறது. (2020)
உலக எலும்புப்புரை நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-10 | October 20
1740ல் மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது.
1803ல் அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
1818ல் அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1827ல் துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
1883ல் பசிபிக் போரில் பெருவின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது. பெருவின் தரப்பக்கா மாகாணம் சிலிக்கு வழங்கப்பட்டது.
1904ல் சிலியும் பொலிவியாவும் தமது எல்லைகளை நிர்ணயிக்கும் அமைதி உடன்பாட்டை ஏற்றுக் கொண்டன.
1941ல் கிறகுஜேவாச் படுகொலைகள்: செர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்சி செருமனியரால் கொல்லப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை செருமனியிடமிருந்து மீட்டது.
1944ல் கிளீவ்லாந்து நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1947ல் பாக்கித்தானும், ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவை ஏற்படுத்தின.
1952ல் கென்யாவில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1961ல் சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஒரு நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவும் நீண்ட தூரம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது.
1962ல் சீனா லடாக் மற்றும் மெக்மோகன் கோடு வரையான இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இந்திய சீனப் போர் ஆரம்பிக்க இது வழிவகுத்தது.
1968ல் அமெரிக்காவின் முன்னாள் முதலாவது சீமாட்டி ஜாக்குலின் கென்னடி கிரேக்கத் தொழிலதிபர் அரிசுடாட்டில் ஒனாசிசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1973ல் இரண்டாம் எலிசபெத் மகாராணி சிட்னி ஒப்பேரா மாளிகையைத் திறந்து வைத்தார்.
1976ல் மிசிசிப்பி ஆற்றில் ஜார்ஜ் பிரின்சு என்ற பயணிகள் கப்பல் சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் இறந்தனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
1982ல் மாஸ்கோ லூசினிக்கி அரங்கில் ஸ்பர்த்தாக், மற்றும் டச்சு ஆர்லெம் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட நெரிசலில் 66 பேர் உயிரிழந்தனர்.
1982ல் இலங்கையில் முதலாவது அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. ஜே. ஆர். ஜெயவர்தனா 52.1% வாக்குகள் பெற்று முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரானார்.
1991ல் இந்தியாவின் உத்தரகாசியில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1995ல் கொழும்பு கொலன்னாவை பெற்றோலியக் கூட்டுத்தாபன எண்ணெய்த் தாங்கிகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்பட்டது, 21 பேர் கொல்லப்பட்டனர்.
2001ல் இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.
2004ல் முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
2011ல் லிபிய உள்நாட்டுப் போர்: தேசிய இடைக்காலப் பேரவை போராளிகள் பதவியில் இருந்து அகற்றப்பட்ட அரசுத்தலைவர் முஅம்மர் அல் கதாஃபியை அவரது சொந்த நகரில் கைப்பற்றிப் படுகொலை செய்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-10 | October 20
1632ல் ஆங்கிலேய கட்டிடக்கலைஞரான கிறிஸ்டோபர் ரென் பிறந்த நாள். (இறப்பு-1723)
1822ல் ஆங்கிலேய நீதிபதியான தோமஸ் ஹியூக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1896)
1854ல் பிரான்சியக் கவிஞரான ஆர்தர் ராம்போ பிறந்த நாள். (இறப்பு-1891)
1859ல் அமெரிக்க உளவியலாளரும் மெய்யியலாளருமான ஜான் டூயி பிறந்த நாள். (இறப்பு-1952)
1874ல் செருமானிய இயற்பியலாளரான எமில் போஸ் பிறந்த நாள். (இறப்பு-1911)
1884ல் இலங்கையின் 1-வது பிரதமரான டி. எஸ். சேனநாயக்கா பிறந்த நாள். (இறப்பு-1952)
1891ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளரான ஜேம்ஸ் சாட்விக் பிறந்த நாள். (இறப்பு-1974)
1894ல் அமெரிக்க நடிகையான ஆலிவ் தோமசு பிறந்த நாள். (இறப்பு-1920)
1904ல் இந்திய அரசியல்வாதியான புபேசு குப்தா பிறந்த நாள். (இறப்பு-1981)
1909ல் தமிழக அரசியல்வாதியான மீ. கல்யாணசுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-1988)
1913ல் ஈழத்து எழுத்தாளரான கந்தையா திருஞானசம்பந்தன் பிறந்த நாள். (இறப்பு-1995)
1917ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான சே. மா. செல்லத்தம்பு பிறந்த நாள்.
1920ல் மொரிசியசு நாட்டின் ஆளுனரான வீராசாமி ரிங்காடு பிறந்த நாள். (இறப்பு-2000)
1923ல் தமிழக எழுத்தாளரும் திறனாய்வாளருமான தொ. மு. சி. ரகுநாதன் பிறந்த நாள். (இறப்பு-2001)
1923ல் கேரள மாநிலத்தின் 20வது முதலமைச்சரான வி. எஸ். அச்சுதானந்தன் பிறந்த நாள்.
1925ல் அமெரிக்க ஊடகவியலாளரான ஆர்ட் புச்வால்ட் பிறந்த நாள். (இறப்பு-2007)
1938ல் ஈழத்துக் கல்வியியலாளரான க. சின்னத்தம்பி பிறந்த நாள்.
1946ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய எழுத்தாளரான எல்ஃபிரெட் எலினெக் பிறந்த நாள்.
1951ல் இத்தாலியக் கால்பந்து வீரரான கிளாடியோ ரனெய்ரி பிறந்த நாள்.
1954ல் இலங்கை நூலகவியலாளரும் ஆய்வாளருமான ந. செல்வராஜா பிறந்த நாள்.
1956ல் ஆங்கிலேய இயக்குநரான டேனி பாயில் பிறந்த நாள்.
1957ல் இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகரான குமார் சானு பிறந்த நாள்.
1958ல் அமெரிக்க நடிகரான விக்கோ மோர்டென்சென் பிறந்த நாள்.
1962ல் இலங்கை மேடை மற்றும் தொலைக்காட்சி நாடகக் கலைஞரான சிறீதர் பிச்சையப்பா பிறந்த நாள். (இறப்பு-2010)
1963ல் இந்தியத் துடுப்பாட்டக்காரரான நவ்ஜோத் சிங் சித்து பிறந்த நாள்.
1964ல் அமெரிக்க அரசியல்வாதியான கமலா ஆரிசு பிறந்த நாள்.
1971ல் அமெரிக்க ராப் கலைஞரான ஸ்னூப் டாக் பிறந்த நாள்.
1974ல் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பா. விஜய் பிறந்த நாள்.
1977ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான ரிச்சர்ட் ரிசி பிறந்த நாள்.
1978ல் இந்தியத் துடுப்பாளரான வீரேந்தர் சேவாக் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 20-10 | October 20
1570ல் போர்த்துக்கீச வரலாற்றாளரான யாவோ டி பாரோசு இறப்பு நாள். (பிறப்பு-1496)
1631ல் செருமானிய வானியலாளரான மைக்கேல் மேசுட்லின் இறப்பு நாள். (பிறப்பு-1550)
1936ல் அமெரிக்கக் கல்வியாளரன ஆனி சலிவன் இறப்பு நாள். (பிறப்பு-1866)
1972ல் அமெரிக்க வானியலாளரான ஆர்லோவ் சேப்ளே இறப்பு நாள். (பிறப்பு-1885)
1984ல் நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க உயிரியலாளரான கார்ல் பெர்டினான்ட் கோரி இறப்பு நாள். (பிறப்பு-1896)
1984ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்க இயற்பியலாளரான பால் டிராக் இறப்பு நாள். (பிறப்பு-1902)
1997ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான ஜீவா ஜீவரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1939)
2008ல் தமிழ்த் திரைப்பட இயக்குனரான ஸ்ரீதர் இறப்பு நாள். (பிறப்பு-1933)
2011ல் லிபியத் தலைவரான முஅம்மர் அல் கதாஃபி இறப்பு நாள். (பிறப்பு-1942)
2014ல் தமிழக எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1925)
2016ல் சப்பானிய மலையேறியான ஜூன்கோ டபெய் இறப்பு நாள். (பிறப்பு-1939)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan