நிலவு
பெண்ணே உன் அழகின் முன்
தன் அழகு தோற்றுவிடும் என்று
அஞ்சி நீ உறங்கும் நேரத்தில்
தன் அழகை காட்டி பகலில்
ஓடி ஒழிந்து கொள்கிறாளோ
அந்த அழகு மங்கை..!
என்றெண்ணி முற்றத்தில் அமர்ந்துகொண்டேன்..!
மெல்லிய குளிர்ந்த தென்றலின் வருடலில்
அழகு மங்கை அவளை அண்ணார்ந்து பார்த்தேன்
அவள் அழகின் பரிசத்தில் மெய்சிலிர்த்து போனேன்
அப்போது அவள் மெல்லிய குரலில்..
” ஏய் மானிடா இந்த
வஞ்சகர் உலகத்தில் என்னையும்
கற்பழித்து விடுவார்கள் என்று பயந்து
எட்டாத உயரத்தில் இருக்கிறேன்”
என்று கூறி அழகு மங்கை அவள் சிரிக்கிறாள்..!
அந்த அழகு மங்கையை யார் காயப்படுத்தியது
அவள் உடலிலும் திட்டு திட்டாய் பல காயங்கள்..!
ஓஓ கடவுளே..!
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: