என் சிந்தனை துளிகள் (2) My Thought (Tamilpiththan kavithai-33) Tamil Kavithaigal

0
409

என் சிந்தனை துளிகள் 2

ஒருவருடைய குற்றம் குறைகளை நீ தெரிந்து வைத்துக்கொள் ஆனால் சொல்லிக்காட்டாதே. அப்போதுதான் உன் வாழ்க்கையை நீ தீங்கின்றி சரியான பாதையில் பாதுகாப்புடன் கொண்டு செல்ல முடியும்.

தினமும் காலையில் உன் கரங்களை பார்த்து விழித்துக்கொள் ஏனென்றால் உன்னை மட்டுமே நீ நம்பி உன் வாழ்க்கை பாதையை அமைக்க முடியும் உன் கரமே உனக்கு ஆதாரம்.

உண்மையான எதிர்பார்ப்பு அற்ற அன்பை நீ பெற்றுக்கொள்ள விரும்பினால், அது ஐந்தறிவு ஜீவனிடம் மட்டுமே கிடைக்கிறது.

உன் பிள்ளைகள் பிழை செய்தால் தண்டிக்காதே, அவர்கள் கற்ற பாடத்தில் ஏதோ பிழை இருக்கிறது என புரிந்துகொள், அவர்களுக்கு பாடத்தை சரியாக கற்றுக்கொடு, ஏனென்றால் அவர்களின் ஆசான் நீ மட்டுமே.

உன் கரங்களை எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டிக்கொள் அது பிறருடைய மூக்கை தொடாது பார்த்துக்கொள். உன் எல்லைகளை தெரிந்துகொள் பிறர் எல்லைகளை அபகரிக்காதே.

உனக்குரியது மட்டுமே உனக்கு நிலையாக இருக்கும். மாற்றானுடையதில் கவனம் செலுத்தி உனக்கு சொந்தமானதை பறிகொடுத்துவிடாதே அது எதுவானாலும் சரி.

நாம் கொடுத்த வலியை தாங்கி அம்மா ந‌ம்மை பெற்றெடுத்ததால் தானோ எமக்கு வலிக்கும் போதெல்லாம் அம்மா என்று அழைக்கின்றோம்.

உண்மையான எதிர்பார்பு அற்ற அன்பை நீ பெற்றுக்கொள்ள விரும்பினால் அது ஐந்தறிவு கொண்ட ஜீவனிடம் மட்டுமே கிடைக்கிறது.

பிறர் மொழிகளையும் பண்பாட்டையும் கற்றுக்கொள் எதற்கு என்றால் உன்னை அவர்கள் மதிப்பதற்கு. உன் தாய் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள் எதற்கு என்றால் நீ பிறரை மதிப்பத‌ற்கு. தன் தாய் மொழிப்பண்பாட்டை நேசிக்க தெரிந்தவனே பிற மொழிப்பண்பாட்டை நேசிப்பான்.

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: