என் சிந்தனை துளிகள் (1) My Thought (Tamilpiththan kavithai-24) Tamil Kavithaigal

0

என் சிந்தனை துளிகள் 1

My Thought 1
My Thought 1

நீ அதிகமாய் பேசினால் பிறருடைய பேசும் பொருளாகி விடுகிறாய். நீ அமைதியாய் இருந்தால் பிறருடைய சிந்தனை பொருளாகிவிடுகிறாய். மொத்தத்தில் உன்னை யார் என்று தீர்மானிப்பது அடுத்தவரே. உன்னை யார் என்று காட்டுவது மட்டுமே நீ.

புரட்சி: உள்ளத்தின் எழுச்சியின் அடக்குமுறையே புரட்சி ஆகும்.

பயம்: அறியாமையின் ஆரம்பம்.

நம்பிக்கை: எப்போதும் கூடவே இருக்கவேண்டிய தோழன்.

உலகம்: விடை தெரியாத கேழ்வி.

இருள்: ஒளிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

நிழல்: இந்த உலகத்தில் உள்ள ஒரே ஒரு நிரந்தரமான உண்மை அதாவது உண்மையின் ஆதாரம்.

அறியாமை: அறிவினுடைய குற்றச்சாட்டு.

போராட்டம்: நிறைவேற்ற வேண்டிய தேவை.

ஓவியம்: வரைந்தவனுக்கு மட்டுமே சொந்தமான ரசனை.

தத்துவம்: ஏற்றுக்கொள்ளபட வேண்டிய உண்மையாம்.

அறிவு: வாழ்க்கை தத்துவம்.

வெற்றி: எப்போதும் நாம் ஏற ஆசைப்படும் அடுத்த படிக்கல்.

கடவுள்: உணர்ந்துகொள்ள மட்டும் முடிந்த ஒரே உறவு.

இதயம்: உணர்வுகள் சேமிக்கும் பெட்டகம்.

விழிகள்: விடை தேடும் கருவி.

சிந்தனை: ஆற்றலின் அறியாமை.

உயிர்: உரிமையில்லா உறவு.

காதல்: காயம் இல்லா வலி.

அன்பு: ஒருவரின் மிகப்பெரிய நம்பிக்கை.

வெறுப்பு: விருப்பமற்ற வெகுமதி அல்லது பரிசு.

நான்: எனக்கு மட்டும் சொந்தமான விளையாட்டு தடல்.

நீ (பிறர்): நாம் விளையாட ஆசைப்படும் விளையாட்டு தடல்.

அப்பா: புரிந்துகொண்டதாக நாம் நம்பும் புரிந்துகொள்ள முடியாத புதிர்.

முயற்சி: வெற்றியின் ஆதாரம். கடந்தகால மீட்டல் வெற்றியாய் இருந்தால் அதுவே உன் முயற்சி.

வெற்றி: உன் பின்னால் மற்றவர்கள் ஓடி வருவது.

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 16.03.2021 Today Rasi Palan 16-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 17.03.2021 Today Rasi Palan 17-03-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!