காதலின் வலி
என் கன்னத்தில் வழியும் கண்ணீரில்
கரையுதடி என் கவி வரிகள்
நீ விளையாட வண்ணத்துப்பூச்சிகள் வாங்கி வந்தேன்
என் வாழ்வில் வண்ணம் போனதடி
உன் பாதம் முத்தமிட கொலுசுகள் வாங்கி வந்தேன்
என் வாழ்வில் ஓசை இன்றி போனதடி
நீ படுத்துறங்க பஞ்சுமெத்தை வாங்கி வந்தேன்
நீ பஞ்சாய் பறந்து போனதேனோ
என்ன குறை கண்டாயடி என் காதலிலே
நீ வருவாயென வழிமீது விழி வைத்து காத்திருந்தேன்
என் கண்ணீரில் வழியோரம் தெரியவில்லை
காற்றிலே கலந்த உன் வாசம் மட்டும்
என் மூச்சிலே கலந்து என் உயிர்மூச்சை கேட்குதடி
விட்டு விடு அதை மட்டும் உன் நினைவு பெட்டகமாக.
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: