January 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 13

0

Today Special Historical Events In Tamil | 13-01 | January 13

January 13 Today Special | January 13 What Happened Today In History. January 13 Today Whose Birthday (born) | January-13th Important Famous Deaths In History On This Day 13/01 | Today Events In History January-13th | Today Important Incident In History | தை 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-01 | தை மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.01 Varalatril Indru Nadanthathu Enna| January 13 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 13/01 | Famous People Born Today January 13 | Famous People died Today 13-01.

  • Today Special in Tamil 13-01
  • Today Events in Tamil 13-01
  • Famous People Born Today 13-01
  • Famous People died Today 13-01
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-01 | January 13

    சனநாயக நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கேப் வர்டி)
    உலோகிரி விழா கொண்டாடப்படுகிறது. (பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம்)
    விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (டோகோ)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-01 | January 13

    1658ல் இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான்.
    1797ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் உயிரிழந்தனர்.
    1815ல் கண்டிப் போர்கள்: பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
    1830ல் லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
    1840ல் அமெரிக்காவின் லெக்சிங்டன் என்ற நீராவிக் கப்பல் லோங் தீவுக்கருகில் மூழ்கியதில் 139 பேர் உயிரிழந்தனர்.
    1842ல் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர்: காபூலில் இருந்து வெளியேறிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன இராணுவத்தைச் சேர்ந்த 4,500 பேரில் வில்லியம் பிரைடன் என்ற மருத்துவர் மட்டுமே உயிருடன் ஜலாலாபாத் நகரை சென்றடைந்தார்.
    1847ல் கலிபோர்னியாவில் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
    1849ல் வான்கூவர் தீவில் குடியேற்றம் ஆரம்பமானது.
    1888ல் தேசிய புவியியல் கழகம் வாசிங்டனில் நிறுவப்பட்டது.
    1893ல் அமெரிக்க கடற்படை, அவாய், ஒனலுலுவில் தரையிறங்கியது.
    1908ல் பென்சில்வேனியாவில் ரோட்ஸ் ஒப்பேரா மாளிகையில் தீப்பிடித்ததில் 171 பேர் உயிரிழந்தனர்.
    1910ல் முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
    1915ல் இத்தாலியின் அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 29,800 பேர் உயிரிழந்தனர்.
    1930ல் மிக்கி மவுஸ் சித்திரங்கள் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
    1938ல் இங்கிலாந்து திருச்சபை சார்ல்ஸ் டார்வினின் கூர்ப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டது.
    1939ல் ஆத்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 20,000 சதுர கிமீ நிலம் காட்டுத்தீயினால் அழிந்தது. 71 பேர் உயிரிழந்தனர்.
    1942ல் ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
    1950ல் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றுடன் மோதியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
    1963ல் டோகோவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சில்வானுசு ஒலிம்பியோ கொல்லப்பட்டார்.
    1964ல் கல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
    1972ல் கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமரும், அரசுத்தலைவரும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்கள்.
    1982ல் வாசிங்டனில் விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
    1985ல் எதியோப்பியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் உயிரிழந்தனர்.
    1986ல் தெற்கு யேமன், ஏடன் நகரில் ஒரு மாதமாக இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
    1991ல் சோவியத் படைவீரர்கள் லித்துவேனியாவில் சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
    1992ல் இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக சப்பான் மன்னிப்புக் கோரியது.
    1993ல் வேதி ஆயுத உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
    1998ல் தற்பாலினர் வெறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அல்பிரெடோ ஓர்மண்டோ என்பவர் புனித பேதுரு சதுக்கத்தில் தீக்குளித்து இறந்தார்.
    2001ல் எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 800 பேர் உயிரிழந்தனர்.
    2006ல் சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
    2012ல் இத்தாலியப் பயணிகள் கப்பல் கொஸ்டா கொன்கோர்டியா கடலில் மூழ்கியதில் 32 பேர் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-01 | January 13

    1858ல் லித்துவேனிய-செருமானிய உயிரியலாளரான‌ ஆஸ்கர் மின்கோவஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1931)
    1864ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ வில்லெம் வீன் பிறந்த நாள். (இறப்பு-1928)
    1879ல் அரிமா சங்கத்தைத் தோற்றுவித்த அமெரிக்கரான‌ மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1961)
    1887ல் உருசிய-பிரான்சிய மெய்யியலாளரான‌ ஜார்ஜ் குர்ச்சீயெவ் பிறந்த நாள். (இறப்பு-1949)
    1889ல் உருசிய வானியற்பியலாளரான‌ வசீலி பெசென்கோவ் பிறந்த நாள். (இறப்பு-1972)
    1906ல் சீன மொழியியலாளரான‌ சூ யூக்வாங் பிறந்த நாள். (இறப்பு-2017)
    1911ல் இந்திய நாடகரும் திரைப்பட நடிகரான‌ எம். ஜி. சக்கரபாணி பிறந்த நாள். (இறப்பு-1986)
    1911ல் சிங்கள இசைக்கலைஞரான‌ ஆனந்த சமரக்கோன் பிறந்த நாள். (இறப்பு-1962)
    1913ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும் கேரள முதலமைச்சருமான‌ செ. அச்சுத மேனன் பிறந்த நாள். (இறப்பு-1991)
    1922ல் ஈழத்து பரத நாட்டியக் கலைஞரான‌ ஏரம்பு சுப்பையா பிறந்த நாள். (இறப்பு-1976)
    1938ல் இந்திய இசையமைப்பாளரான‌ சிவக்குமார் சர்மா பிறந்த நாள். (இறப்பு-2022)
    1946ல் தமிழகக் கல்வியாளரும் கவிஞரான‌ ஆர். பாலச்சந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2009)
    1949ல் இந்திய விண்வெளி வீரரான‌ ராகேஷ் சர்மா பிறந்த நாள்.
    1960ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ எரிக் பெட்சிக் பிறந்த நாள்.
    1977ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ ஆர்லாந்தோ புளூம் பிறந்த நாள்.
    1978ல் அமெரிக்க ஊடகவியலாளரும் புள்ளிவிபரவியலாளருமான‌ நேட் சில்வர் பிறந்த நாள்.
    1983ல் இந்திய நடிகரான‌ இம்ரான் கான் பிறந்த நாள்.
    1990ல் ஆத்திரேலிய நடிகரான‌ லியம் எம்சுவர்த் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 13-01 | January 13

    1717ல் செருமானியப் பூச்சியியலாளரான‌ மரியா சிபில்லா மெரியன் இறப்பு நாள். (பிறப்பு-1647)
    1906ல் உருசிய இயற்பியலாளரான‌ அலெக்சாண்டர் பப்போவ் இறப்பு நாள். (பிறப்பு-1859)
    1941ல் அயர்லாந்து எழுத்தாளரான‌ ஜேம்ஸ் ஜோய்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1882)
    1977ல் துருக்கிய-பிரான்சிய வரலாற்றாளரான என்றி லங்லொவைசு இறப்பு நாள். (பிறப்பு-1914)
    2013ல் ஈழத்து எழுத்தாளரான‌ கனகசபை சிவகுருநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
    2014ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ அஞ்சலிதேவி இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2015ல் அமெரிக்க இயற்பியலாளரான‌ மார்வின் டி. கிரார்டோ இறப்பு நாள். (பிறப்பு-1930)
    2016ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான‌ ஜி. ஏ. வடிவேலு இறப்பு நாள். (பிறப்பு-1925)
    2016ல் இந்தியத் தரைப்படைத் தளபதியான‌ ஜெ. எப். ஆர். ஜேக்கப் இறப்பு நாள். (பிறப்பு-1923)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleJanuary 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 12
    Next articleJanuary 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 14