January 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 12

0

Today Special Historical Events In Tamil | 12-01 | January 12

January 12 Today Special | January 12 What Happened Today In History. January 12 Today Whose Birthday (born) | January-12th Important Famous Deaths In History On This Day 12/01 | Today Events In History January-12th | Today Important Incident In History | தை 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-01 | தை மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.01 Varalatril Indru Nadanthathu Enna| January 12 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 12/01 | Famous People Born Today January 12 | Famous People died Today 12-01.

  • Today Special in Tamil 12-01
  • Today Events in Tamil 12-01
  • Famous People Born Today 12-01
  • Famous People died Today 12-01
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-01 | January 12

    தேசிய இளைஞர் நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
    சான்சிபார் புரட்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தன்சானியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-01 | January 12

    1528ல் முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார்.
    1554ல் பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார்.
    1848ல் போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது.
    1853ல் தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
    1866ல் கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.
    1866ல் அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
    1872ல் நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
    1908ல் முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
    1915ல் அமெரிக்க காங்கிரசு பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
    1918ல் இங்கிலாந்து, இசுட்டாஃபர்ட்சயர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர்.
    1918ல் பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது உருசியா குண்டுகளை வீசியது.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
    1964ல் சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
    1967ல் எம். ஆர். ராதா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
    1970ல் நைசீரிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
    1976ல் பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
    1990ல் அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
    1991ல் பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரசு ஒப்புதல் அளித்தது.
    1992ல் மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
    1998ல் 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.
    2004ல் உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான “குயீன் மேரி 2” தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
    2005ல் புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
    2006ல் சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
    2006ல் 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை அருள் சின்னப்பரைச் சுட்டுக் காயப்படுத்திய மெகுமேது அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    2010ல் எயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100,000 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் பெரும் பகுதி அழிந்தது.
    2015ல் கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-01 | January 12

    1598ல் பேரரசரான‌ சிவாஜியின் அன்னை ஜிஜாபாய் பிறந்தநாள். (இறப்பு-1674)
    1746ல் சுவிட்சர்லாந்து மெய்யியலாளரான‌ யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி பிறந்தநாள். (இறப்பு-1827)
    1848ல் செருமனிய வேளாண்மை வேதியியலாளரான‌ பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு பிறந்தநாள். (இறப்பு-1926)
    1863ல் இந்திய மெய்யியலாளரும் ஆன்மிகவாதியுமான‌ விவேகானந்தர் பிறந்தநாள். (இறப்பு-1902)
    1869ல் இந்திய மெய்யியலாளரும் அரசியல்வாதியுமான‌ பக்வான் தாஸ் பிறந்தநாள். (இறப்பு-1958)
    1893ல் செருமானிய இராணுவத் தலைவரும் அரசியல்வாதியுமான எர்மன் கோரிங் பிறந்தநாள். (இறப்பு-1946)
    1893ல் எசுத்தோனிய-செருமானிய கட்டிடக்கலைஞரும் அரசியல்வாதியுமான‌ ஆல்பிரட் ரோசன்பெர்க் பிறந்தநாள். (இறப்பு-1946)
    1895ல் இந்திய உயிரிவேதியியலாளரான‌ எல்லப்பிரகத சுப்பாராவ் பிறந்தநாள். (இறப்பு-1948)
    1918ல் இந்திய-இடச்சு மதகுருவான‌ மகேஷ் யோகி பிறந்தநாள். (இறப்பு-2008)
    1924ல் தமிழக அரசியல்வாதியான‌ எஸ். எம். அப்துல் மஜீத் பிறந்தநாள்.
    1936ல் இந்திய அரசியல்வாதியான‌ முப்தி முகமது சயீத் பிறந்தநாள். (இறப்பு-2016)
    1944ல் அமெரிக்கக் குத்துச் சண்டை வீரரான‌ ஜோ பிரேசியர பிறந்தநாள். (இறப்பு-2011)
    1949ல் துனீசியாவின் 19வது பிரதமரான அமாதி ஜெபாலி பிறந்தநாள்.
    1949ல் சப்பானிய எழுத்தாளரான‌ அருக்கி முரகாமி பிறந்தநாள்.
    1956ல் பிரித்தானிய ஊடகவியலாளரான மரீ கோல்வின் பிறந்தநாள்.(இறப்பு-2012)
    1956ல் சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகரான‌ நிக்கலாய் நசுக்கோவ் பிறந்தநாள்.
    b1964ல் அமேசான்.காம் தளத்தை ஆரம்பித்த அமெரிக்கக் கணினியியலாளரும் தொழிலதிபருமான ஜெப் பெசோஸ் பிறந்தநாள்.
    1967ல் இலங்கை அரசியல்வாதியான‌ சஜித் பிரேமதாச பிறந்தநாள்.
    1972ல் இந்திய அரசியல்வாதியான‌ பிரியங்கா காந்தி பிறந்தநாள்.
    1990ல் உருசிய-உக்ரைனிய சதுரங்க ஆட்ட வீரரான‌ சேர்ஜே கார்ஜக்கின் பிறந்தநாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 12-01 | January 12

    1665ல் பிரான்சியக் கணிதவியலாளரான‌ பியேர் டி பெர்மா இறப்பு நாள். (பிறப்பு-1601)
    1909ல் லித்துவேனிய-செருமானியக் கணிதவியலாளரான‌ ஹெர்மான் மின்கோவ்ஸ்கி இறப்பு நாள். (பிறப்பு-1864)
    1934ல் வங்காளதேசக் கல்வியாளரும் செயல்பாட்டாளருமான‌ சூரியா சென் இறப்பு நாள். (பிறப்பு-1894)
    1976ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ அகதா கிறிஸ்டி இறப்பு நாள். (பிறப்பு-1890)
    2000ல் தமிழக அரசியல்வாதியான‌ இரா. நெடுஞ்செழியன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
    2005ல் இந்திய நடிகரான‌ அம்ரீஷ் பூரி இறப்பு நாள். (பிறப்பு- 1932)
    2007ல் தமிழகக் கவிஞரான முருகு சுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1929)
    2009ல் இலங்கை எழுத்தாளரான‌ புலோலியூர் க. தம்பையா இறப்பு நாள்.
    2013ல் மலையாள எழுத்தாளரான‌ ஐ. கே. கே. மேனன் இறப்பு நாள். (பிறப்பு-1919)
    2014ல் ஈழத்து எழுத்தாளரான‌ அன்புமணி இறப்பு நாள். (பிறப்பு-1935)
    2017ல் தழமிக எழுத்தாளரும் தமிழறிஞருமான ச. வே. சுப்பிரமணியன் இறப்பு நாள். (பிறப்பு-1929)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleJanuary 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 11
    Next articleJanuary 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 13