January 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 08

0

Today Special Historical Events In Tamil | 08-01 | January 08

January 08 Today Special | January 08 What Happened Today In History. January 08 Today Whose Birthday (born) | January-08th Important Famous Deaths In History On This Day 08/01 | Today Events In History January-08th | Today Important Incident In History | தை 08 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 08-01 | தை மாதம் 08ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 08.01 Varalatril Indru Nadanthathu Enna| January 08 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 08/01 | Famous People Born Today January 08 | Famous People died Today 08-01.

January 08
  • Today Special in Tamil 08-01
  • Today Events in Tamil 08-01
  • Famous People Born Today 08-01
  • Famous People died Today 08-01
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 08-01 | January 08

    பொதுநலவாய நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(வடக்கு மரியானா தீவுகள்)
    தட்டச்சு நாளாக கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 08-01 | January 08

    871ல் பேரரசர் ஆல்பிரட் மேற்கு சாக்சன் இராணுவத்துக்குத் தலைமை தாங்கி டானிலாவ் வைக்கிங்குகளின் முற்றுகையை முறியடித்தார்.
    1297ல் மொனாக்கோ விடுதலை பெற்றது.
    1454ல் தெற்கு ஆப்பிரிக்காவில் வணிக, மற்றும் குடியேற்றங்களுக்கான முழு உரிமையையும் வழங்கும் திருத்தந்தையின் ஆணை ஓலை போர்த்துகலுக்கு வழங்கப்பட்டது.
    1499ல் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் பிரித்தானியின் ஆன் இளவரசியைத் திருமணம் புரிந்தார்.
    1806ல் கேப் குடியேற்றம் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது.
    1815ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: நியூ ஓர்லென்ஸ் சமரில் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் அமெரிக்கப் படைகள் பிரித்தானியப் படைகளை வென்றன.
    1828ல் ஐக்கிய அமெரிக்காவின் சனநாயகக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
    1835ல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய கடன் சுழிய நிலையை எட்டியது.
    1838ல் ராபர்ட் கால்டுவெல் மதப் பணியாற்ற அயர்லாந்தில் இருந்து சென்னை வந்தார்.
    1867ல் வாசிங்டனில்யில் ஆப்பிரிக்க அமெரிக்க ஆண்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
    1889ல் எர்மன் ஒல்லெரித் மின்னாற்றலில் இயங்கும் துளை அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
    1902ல் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
    1906ல் நியூயோர்க்கில் அட்சன் ஆற்றில் களிமண் கிண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.
    1912ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
    1916ல் முதலாம் உலகப் போர் (கலிப்பொலி நடவடிக்கை): கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.
    1926ல் வியட்நாமின் கடைசி மன்னராக பாவோ டாய் முடிசூடினார்.
    1926ல் அப்துல்லா பின் அப்துல் அசீசு எஜாசு நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவூதி அரேபியா என மாற்றினார்.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.
    1946ல் கோவை சின்னியம்பாளையம் பஞ்சாலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
    1956ல் எக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதப்பரப்புனர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.
    1961ல் அல்சீரியாவில் சார்லசு டி கோலின் கொள்கைகளுக்கு பிரஞ்சு மக்கள் பொது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர்.
    1963ல் ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக லியொனார்டோ டா வின்சியின் மோனா லிசா வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
    1964ல் அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான போரை அறிவித்தார்.
    1972ல் சர்வதேச அழுத்தத்தை அடுத்து, பாக்கித்தான் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ வங்காளத் தலைவர் முசிப்புர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்தார்.
    1973ல் சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.
    1977ல் சோவியத் தலைநகர் மாஸ்கோவில் ஆர்மீனிய பிரிவினைவாதிகளால் 37 நிமிடங்களில் மூன்று குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
    1989ல் இங்கிலாந்து கெக்வர்த் நகரில் போயிங் 727 வானூர்தி நெடுஞ்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 126 பேரில் 47 பேர் உயிரிழந்தனர்.
    1994ல் உருசியாவின் விண்ணோடி வலேரி பொல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தம் 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்தார்.
    1995ல் தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.
    1996ல் சயீர் தலைநகர் கின்சாசாவில் அன்டனோவ் ஏஎன்-32 சரக்கு வானூர்தி ஒன்று சந்தை ஒன்றில் வீழ்ந்ததில் தரையில் 223 பேரும், விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரில் இருவரும் உயிரிழந்தனர்.
    2003ல் அமெரிக்காவில், வட கரொலைனாவில் ஏர் மிட்வெசுட் வானூர்தி ஒன்று சார்லட் டக்ளஸ் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 21 பேரும் உயிரிழந்தனர்.
    2003ல் துருக்கியில் தியார்பக்கீர் விமான நிலையம் அருகே துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பயணிகளில் 70 பேரும், பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
    2004ல் குயீன் மேரி 2 உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலை ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி திறந்து வைத்தார்.
    2008ல் கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இலங்கை அமைச்சர் டி. எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
    2009ல் இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பு நகரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    2009ல் கோஸ்ட்டா ரிக்காவின் வடக்கே 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.
    2019ல் தெகுரானில் இருந்து கீவ் நோக்கிச் சென்ற உக்ரைனிய போயிங் 737–800 பயணிகள் வானூர்தி புறப்பட்ட சில நிமிட நேரத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 167 பயணிகள் உட்பட அனைத்து 176 பேரும் உயிரிழந்தனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 08-01 | January 08

    1823ல் உவெல்சிய-ஆங்கிலேய புவியியலாளரும் உயிரியலாளருமான‌ ஆல்பிரடு அரசல் வாலேசு பிறந்த நாள். (இறப்பு-1913)
    1847ல் ஈழத்து உரையாசிரியரும் தமிழறிஞரும் பதிப்பாசிரியருமான‌ ம. க. வேற்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1930)
    1867ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளரான‌ எமிலி கிரீன் பால்ச் பிறந்த நாள். (இறப்பு-1961)
    1891ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ வால்தெர் பொதே பிறந்த நாள். (இறப்பு-1957)
    1894ல் போலந்து கத்தோலிக்கப் புனிதரான‌ மாக்சிமிலியன் கோல்பே பிறந்த நாள். (இறப்பு-1941)
    1899ல் ஈழத்துத் தமிழறிஞரான‌ ஏ. பெரியதம்பிப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1978)
    1899ல் இலங்கையின் 4வது பிரதமரான‌ எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பிறந்த நாள். (இறப்பு-1959)
    1902ல் அமெரிக்க உளவியலாளரான‌ கார்ல் ரோஜர்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1987)
    1909ல் இந்திய எழுத்தாளரும் கவிஞருமான‌ ஆஷாபூர்ணா தேவி பிறந்த நாள். (இறப்பு-1995)
    1923ல் அமெரிக்க இயற்பியலாளரான‌ பிரைஸ் டிவிட் பிறந்த நாள்.
    1926ல் இந்திய நடனக் கலைஞரான‌ கேளுச்சரண மகோபாத்திரா பிறந்த நாள். (இறப்பு-2004)
    1928ல் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் இதழாளருமான‌ மா. செங்குட்டுவன் பிறந்த நாள். (இறப்பு-2021)
    1935ல் அமெரிக்கப் பாடகரான‌ எல்விஸ் பிரெஸ்லி பிறந்த நாள். (இறப்பு-1977)
    1942ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் எழுத்தாளருமான‌ ஸ்டீபன் ஹோக்கிங் பிறந்த நாள்.
    1942ல் சப்பானின் 56வது பிரதமரான‌ ஜூனிசிரோ கொய்சுமி பிறந்த நாள்.
    1975ல் இந்திய இசையமைப்பாளரான‌ ஹாரிஸ் ஜயராஜ் பிறந்த நாள்.
    1984ல் வடகொரியாவின் 3வது அரசுத்தலைரான‌ கிம் ஜொங்‍உன் பிறந்த நாள்.
    1987ல் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடலாசிரியரான‌ கே பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 08-01 | January 08

    1324 இத்தாலிய வணிகரான‌ மார்க்கோ போலோ இறப்பு நாள். (பிறப்பு-1254)
    1642 இத்தாலிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ கலீலியோ கலிலி இறப்பு நாள். (பிறப்பு-1564)
    1884 இந்திய இந்து மெய்யியலாளருமான‌ சீர்திருத்தவாதியுமான‌ கேசப் சந்திர சென் இறப்பு நாள். (பிறப்பு-1838)
    1914 சௌராட்டிர மதகுருவான‌ நடனகோபாலநாயகி சுவாமிகள் இறப்பு நாள். (பிறப்பு-1843)
    1941 சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயரான‌ பேடன் பவல் இறப்பு நாள். (பிறப்பு-1857)
    1952 அமெரிக்க வானியலாளரான‌ அந்தோனியா மவுரி இறப்பு நாள். (பிறப்பு-1866)
    1976 சீனாவின் 1வது பிரதமரான‌ சோ என்லாய் இறப்பு நாள். (பிறப்பு-1898)
    1994 காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான‌ சந்திரசேகர சரசுவதி இறப்பு நாள். (பிறப்பு-1894)
    1997 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ மெல்வின் கால்வின் இறப்பு நாள். (பிறப்பு-1911)
    2008 இலங்கை அமைச்சரும் அரசியல்வாதியுமான‌ டி. எம். தசநாயக்க இறப்பு நாள். (பிறப்பு-1953)
    2009 இலங்கை ஊடகவியலாளரான‌ லசந்த விக்கிரமதுங்க இறப்பு நாள். (பிறப்பு-1958)
    2010 அமெரிக்க இயக்குநரான‌ ஆர்ட் குலொக்கி இறப்பு நாள். (பிறப்பு-1921)
    2012 தமிழகத் தமிழறிஞரான‌ அடிகளாசிரியர் இறப்பு நாள். (பிறப்பு-1910)
    2019 இந்திய குசராத்து அரசியல்வாதியான‌ ஜெயந்திலால் பானுசாலி இறப்பு நாள். (பிறப்பு-1964)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleJanuary 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 06
    Next articleJanuary 09வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 09