January 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 07

0

Today Special Historical Events In Tamil | 07-01 | January 07

January 07 Today Special | January 07 What Happened Today In History. January 07 Today Whose Birthday (born) | January-07th Important Famous Deaths In History On This Day 07/01 | Today Events In History January-07th | Today Important Incident In History | தை 07 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 07-01 | தை மாதம் 07ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 07.01 Varalatril Indru Nadanthathu Enna| January 07 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 07/01 | Famous People Born Today January 07 | Famous People died Today 07-01.

  • Today Special in Tamil 07-01
  • Today Events in Tamil 07-01
  • Famous People Born Today 07-01
  • Famous People died Today 07-01
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 07-01 | January 07

    நத்தாராக கொண்டாடப்படுகிறது. (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டி)
    இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (கம்போடியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 07-01 | January 07

    1325ல் போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார்.
    1558ல் கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.
    1566ல் ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1608ல் அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
    1610ல் கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.
    1738ல் போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
    1782ல் அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
    1785ல் பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம ஊதுபை ஒன்றில் இங்கிலாந்து டோவர் துறையில் இருந்து பிரான்சின் கலே வரை பயணம் செய்தார்.
    1841ல் யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
    1846ல் இலங்கையில் தி எக்சாமினர் என்ற ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.[2]
    1894ல் வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
    1927ல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
    1935ல் பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
    1939ல் மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.
    1942ல் இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.
    1950ல் அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
    1954ல் இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
    1959ல் பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
    1968ல் நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
    1972ல் எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
    1979ல் வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
    1984ல் புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
    1985ல் சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
    1990ல் பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
    1991ல் எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.
    1999ல் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.
    2005ல் இத்தாலியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
    2006ல் திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
    2012ல் நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.
    2015ல் பாரிசு நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்தனர்.
    2015ல் யெமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டான்ர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 07-01 | January 07

    1502ல் திருத்தந்தையான‌ பதின்மூன்றாம் கிரகோரி பிறந்த நாள். (இறப்பு-1585)
    1831ல் பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியரான‌ ஈன்றிக் வொன் இசுட்டீபன் பிறந்த நாள். (இறப்பு- 1897)
    1844ல் பிரான்சியப் புனிதரான‌ பெர்னதெத் சுபீரு பிறந்த நாள். (இறப்பு-1879)
    1851ல் பிரித்தானிய மொழியியல் அறிஞரான‌ ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் பிறந்த நாள். (இறப்பு-1941)
    1920ல் ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளரான‌ அலஸ்ட்டயர் பில்கிங்டன் பிறந்த நாள். (இறப்பு-1995)
    1925ல் யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளரான‌ தங்கம்மா அப்பாக்குட்டி பிறந்த நாள். (இறப்பு- 2008)
    1938ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ பி. சரோஜாதேவி பிறந்த நாள்.
    1943ல் அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளையான‌ சடாகோ சசாகி பிறந்த நாள். (இறப்பு-1955)
    1945ல் கனடிய பெண்ணியவாதியான‌ சுலாமித் பயர்சுடோன் பிறந்த நாள். (இறப்பு-2012)
    1948ல் இந்திய எழுத்தாளரான‌ சோபா டே பிறந்த நாள்.
    1948ல் சப்பானியப் பாடகரும் நடிகரான‌ இசிரோ மிசுகி பிறந்த நாள்.
    1953ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகரான‌ பாக்கியராஜ் பிறந்த நாள்.
    1964ல் அமெரிக்க நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ நிக்கோலஸ் கேஜ் பிறந்த நாள்.
    1967ல் இந்திய நடிகரான‌ இர்பான் கான் பிறந்த நாள். (இறப்பு- 2020)
    1971ல் அமெரிக்க நடிகரான‌ ஜெரமி ரெனர் பிறந்த நாள்.
    1972ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகருமான‌ எஸ். பி. பி. சரண் பிறந்த நாள்.
    1976ல் தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகருமான‌ ஹரிஷ் ராகவேந்திரா பிறந்த நாள்.
    1979ல் இந்திய நடிகையான‌ பிபாசா பாச பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 07-01 | January 07

    1943 செருபிய-அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளரான‌ நிக்கோலா தெஸ்லா இறப்பு நாள். (பிறப்பு-1856)
    1978 தமிழகத் தமிழறிஞரும் பன்மொழி அறிஞருமான‌ வெ. சாமிநாத சர்மா இறப்பு நாள். (பிறப்பு-1895)
    1987 தமிழக எழுத்தாளரான‌ லட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1921)
    1989 சப்பானியப் பேரரசரான‌ இறோகித்தோ இறப்பு நாள். (பிறப்பு-1901)
    1995 ஈழத்து சிறுகதை எழுத்தாளரான‌ சம்பந்தன் இறப்பு நாள். (பிறப்பு-1913)
    1995 அமெரிக்கப் பொருளியலாளரும் வரலாற்றாளருமான‌ முரே ரோத்பார்ட் இறப்பு நாள். (பிறப்பு-1926)
    1996 தமிழகத் திரைப்பட இசையமைப்பாளரான‌ வி. குமார் இறப்பு நாள். (பிறப்பு-1934)
    2011 இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ சிலோன் சின்னையா இறப்பு நாள். (பிறப்பு-1941)
    2015 இந்தியத் தொழிலதிபரான‌ பி. எஸ். அப்துர் ரகுமான் இறப்பு நாள். (பிறப்பு-1927)
    2015 துனீசிய-பிரான்சிய கேலிச்சித்திர வரைஞரான‌ ஜார்ஸ் போலான்ஸ்கி இறப்பு நாள். (பிறப்பு-1934)
    2016 இந்திய அரசியல்வாதியான‌ முப்தி முகமது சயீத் இறப்பு நாள். (பிறப்பு-1936)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleJanuary 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 05
    Next articleJanuary 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 06