Today Special Historical Events In Tamil | 06-01 | January 06
January 06 Today Special | January 06 What Happened Today In History. January 06 Today Whose Birthday (born) | January-06th Important Famous Deaths In History On This Day 06/01 | Today Events In History January-06th | Today Important Incident In History | தை 06 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 06-01 | தை மாதம் 06ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.01 Varalatril Indru Nadanthathu Enna| January 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/01 | Famous People Born Today January 06 | Famous People died Today 06-01.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-01 | January 06
நத்தாராக கொண்டாடப்படுகிறது. (ஆர்மீனியா)
வேட்டி நாளாக கொண்டாடப்படுகிறது. (இந்தியா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-01 | January 06
1066ல் இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார்.
1449ல் பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1540ல் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1690ல் முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1809ல் நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.
1838ல் ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
1839ல் அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.
1887ல் எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
1899ல் இந்தியாவின் வைசிராயாக கர்சன் பிரபு நியமிக்கப்பட்டார்.
1900ல் இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1907ல் மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.
1912ல் நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1912ல் கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
1928ல் தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
1929ல் யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.
1929ல் அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
1930ல் முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.
1936ல் கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
1946ல் வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1947ல் உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
1950ல் ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
1951ல் கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1959ல் பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.
1960ல் ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1960ல் நியூயார்க்கில் இருந்து மயாமி நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.
1974ல் 1973 எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.
1989ல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1992ல் ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
1993ல் சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
2007ல் கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
2007ல் இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007ல் இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
2017ல் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
2021ல் அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு உறுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு இடையூறு விளைவிக்க டோனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க சட்டமன்றத்தில் புகுந்து நடத்திய வன்முறைகளில் ஐவர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-01 | January 06
255ல் திருத்தந்தையும் உரோமை ஆயருமான முதலாம் மர்செல்லுஸ் பிறந்த நாள்.(இறப்பு-309)
1412ல் பிரான்சிய வீராங்கனயான ஜோன் ஆஃப் ஆர்க் பிறந்த நாள். (இறப்பு-1431)
1500ல் எசுப்பானியப் புனிதரான அவிலா நகரின் யோவான் பிறந்த நாள். (இறப்பு-1569)
1878ல் அமெரிக்கக் கவிஞரும் வரலாற்றாளருமான கார்ல் சாண்ட்பர்க் பிறந்த நாள். (இறப்பு-1967)
1883ல் லெபனான்-அமெரிக்க கவிஞரும் ஓவியருமான கலீல் ஜிப்ரான் பிறந்த நாள். (இறப்பு-1931)
1899ல் இலங்கைத் தொழிலதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சிற்றம்பலம் கார்டினர் பிறந்த நாள். (இறப்பு-1960)
1910ல் கருநாடக இசைப் பாடகரும் நடிகருமான ஜி. என். பாலசுப்பிரமணியம் பிறந்த நாள். (இறப்பு-1965)
1917ல் நடிகர், இசையமைப்பாளரும் திரைப்படப் பாடகருமான சி. எஸ். ஜெயராமன் பிறந்த நாள். (இறப்பு-1995)
1924ல் தென்கொரியக் குடியரசுத் தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான கிம் டாய் ஜுங் பிறந்த நாள். (இறப்பு-2009)
1936ல் புதுச்சேரி எழுத்தாளரான க. பொ. இளம்வழுதி பிறந்த நாள். (இறப்பு-2013)
1942ல் ஈழத்து எழுத்தாளரான தெணியான் பிறந்த நாள்.
1945ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ஜெயந்தி பிறந்த நாள். (இறப்பு-2021)
1955ல் ஆங்கிலேய நடிகரான ரோவன் அட்கின்சன் பிறந்த நாள்.
1959ல் இந்தியத் துடுப்பாட்டக்காரரான கபில் தேவ் பிறந்த நாள்.
1967ல் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான ஏ. ஆர். ரகுமான் பிறந்த நாள்.
1989ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான பியா பஜ்பை பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-01 | January 06
1731ல் பிரான்சிய மருத்துவரும் வேதியியலாளருமான எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் இறப்பு நாள். (பிறப்பு-1672)
1852ல் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியரான லூயி பிரெயில் இறப்பு நாள். (பிறப்பு-1809)
1884ல் செக் நாட்டு தாவரவியலாளரான கிரிகோர் மெண்டல் இறப்பு நாள். (பிறப்பு-1822)
1918ல் செருமானியக் கணிதவியலாள்ரும் மெய்யியலாளருமான கியார்கு கேன்ட்டர் இறப்பு நாள். (பிறப்பு-1845)
1919ல் அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவரான தியொடோர் ரோசவெல்ட் இறப்பு நாள். (பிறப்பு-1858)
1937ல் கனடியப் புனிதரான ஆந்திரே பெசெத் இறப்பு நாள். (பிறப்பு-1845)
1943ல் புதுவை விடுதலைக்காகப் போராடியவரும் தமிழறிஞருமான அரங்கசாமி நாயக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1944ல் பிரான்சிய வளிமண்டல ஆய்வாளரான என்றி புய்சன் இறப்பு நாள். (பிறப்பு-1873)
1945ல் உருசிய வேதியியலாளரான விளாதிமிர் வெர்னாத்ஸ்கி இறப்பு நாள். (பிறப்பு-1863)
1966ல் தமிழக இதழியலாளரும் எழுத்தாளரான டி. எஸ். சொக்கலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1899)
1990ல் நோபல் பரிசு மெற்ற உருசிய இயற்பியலாளரான பாவெல் செரன்கோவ் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1997ல் ஈழத்து எழுத்தாளரும் கவிஞருமான பிரமீள் இறப்பு நாள். (பிறப்பு-1939)
2017ல் இந்திய நடிகரான ஓம் பூரி இறப்பு நாள். (பிறப்பு-1950)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan