January 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 05

0

Today Special Historical Events In Tamil | 01-01 | January 05

January 05 Today Special | January 05 What Happened Today In History. January 05 Today Whose Birthday (born) | January-05th Important Famous Deaths In History On This Day 05/01 | Today Events In History January-05th | Today Important Incident In History | தை 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-01 | தை மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 05.01 Varalatril Indru Nadanthathu Enna| January 05 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 05/01 | Famous People Born Today January 05 | Famous People died Today 05-01.

January 05
 • Today Special in Tamil 05-01
 • Today Events in Tamil 05-01
 • Famous People Born Today 05-01
 • Famous People died Today 05-01
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 05-01 | January 05

  தேசிய பறவை நாளாக கொண்டாடப்படுகிறது. (ஐக்கிய அமெரிக்கா)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 05-01 | January 05

  1066ல் இங்கிலாந்து மன்னர் எட்வர்டு வாரிசுகள் இல்லாமல் இறந்தார். இது நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுகையில் முடிந்தது.
  1477ல் பர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, அது பிரான்சின் பகுதியானது.
  1554ல் நெதர்லாந்தில் ஐந்தோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் அழிந்தன.
  1664ல் பேரரசர் சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர்.
  1757ல் பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னர் கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
  1781ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: வர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பெனடிக்ட் ஆர்னோல்டு தலைமையிலான பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
  1840ல் இலங்கையில் மீன் வரி அறவிடுவது நிறுத்தப்பட்டது.
  1846ல் ஒரிகன் பிராந்தியத்தை ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்காவின் கீழவை எதிர்த்து வாக்களித்தது.
  1854ல் சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
  1882ல் அமெரிக்க அரசுத்தலைவர் யேம்சு கார்பீல்டைக் கொலை செய்த குற்றத்திற்காக சார்லசு கிட்டோ என்பவனுக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
  1896ல் வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
  1900ல் அயர்லாந்துத் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
  1905ல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.[2]
  1918ல் செருமன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது.
  1933ல் கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
  1940ல் பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
  1945ல் போலந்தின் புதிய சோவியத்-சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
  1950ல் சோவியத் ஒன்றியத்தில் சிவெர்திலோவ்சுக் நகரில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த சோவியத் வான் படையின் தேசிய பனி வளைதடியாட்டக் குழுவின் அனைத்து உறுப்பினர்கள் உட்பட அனைத்து 19 பேரும் உயிரிழந்தனர்.
  1967ல் இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  1970ல் சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 7.1 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10,000–15,000 வரையானோர் உயிரிழந்தனர். 26,000 பேர் காயமடைந்தனர்.
  1971ல் உலகின் முதல் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி ஆத்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
  1972ல் விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
  1974ல் பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் உயிரிழந்தனர்.
  1975ல் ஆத்திரேலியா, தாசுமேனியாவில் தாசுமான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
  1976ல் கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
  1984ல் ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
  1991ல் சியார்சியப் படைகள் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் தரையிறங்கின. 1991–92 Sதெற்கு ஒசேத்தியப் போர் ஆரம்பமானது.
  1997ல் உருசியப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
  2000ல் ஈழப்போர்: இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
  2005ல் சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள் ஏரிசு கண்டுபிடிக்கப்பட்டது.
  2007ல் ஈழப்போர்: கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
  2014ல் இந்திய கடுங்குளிர் இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-14 தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 05-01 | January 05

  1592 முகலாயப் பேரரசரான‌ ஷாஜகான் பிறந்த நாள். (இறப்பு-1666)
  1876 மேற்கு செருமனியின் அரசுத்தலைவரான‌ கொன்ராடு அடேனார் பிறந்த நாள். (இறப்பு-1967)
  1893 இந்திய-அமெரிக்க குருவான‌ பரமஹம்ச யோகானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1952)
  1902 தமிழக அரசியல்வாதியான‌ ரா. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள். (இறப்பு-1973)
  1926 இலங்கைத் திரைப்பட இசையமைப்பாளரரும் பாடகருமான‌ ஆர். முத்துசாமி பிறந்த நாள். (இறப்பு-1988)
  1926 சிங்கப்பூர் அரசியல்வாதியான‌ ஜே. பி. ஜெயரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-2008)
  1927 இறைவன் கோவிய நிறுவிய அமெரிக்கரும் யோக சுவாமிகளின் சீடருமான சிவாய சுப்ரமணியசுவாமி பிறந்த நாள். (இறப்பு-2001)
  1928 பாக்கித்தானின் 4வது அரசுத்தலைவரான‌ சுல்பிக்கார் அலி பூட்டோ பிறந்த நாள். (இறப்பு-1979)
  1928 இலங்கை எழுத்தாளரான‌ தில்லைச் சிவன் பிறந்த நாள்.
  1931 இந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநரும் தொலைக்காட்சி நடிகருமான‌ சாருஹாசன் பிறந்த நாள்.
  1932 இத்தாலிய மெய்யியலாளரான‌ உம்பெர்த்தோ எக்கோ பிறந்த நாள். (இறப்பு-2016)
  1934 இந்திய அரசியல்வாதியான‌ முரளி மனோகர் ஜோஷி பிறந்த நாள்.
  1937 ஈழத்துக் கலைஞரும் பதிப்பாளருமான சித்தி அமரசிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2007)
  1938 எசுப்பானிய அரசரான‌ முதலாம் வான் கார்லோஸ் பிறந்த நாள்.
  1938 கென்ய எழுத்தாளரான‌ நுகுகி வா தியங்கோ பிறந்த நாள்.
  1939 இலங்கை அரசியல்வாதியான‌ எம். ஈ. எச். மகரூப் பிறந்த நாள். (இறப்பு-1997)
  1941 இந்தியத் துடுப்பாளரான‌ மன்சூர் அலி கான் பட்டோடி பிறந்த நாள். (இறப்பு-2011)
  1953 இந்திய அரசியல்வாதியான‌ ஆனந்த் சர்மா பிறந்த நாள்.
  1955 மேற்கு வங்காளத்தின் முதலமைச்சரான‌ மம்தா பானர்ஜி பிறந்த நாள்.
  1956 செருமனியின் 14-ஆவது அரசுத்தலைவரான‌ பிராங் வால்டர் சென்மர் பிறந்த நாள்.
  1959 தமிழகத் திரைப்பட நடிகரான‌ பாண்டியன் பிறந்த நாள். (இறப்பு-2008)
  1968 இந்திய அரசியல்வாதியான‌ கனிமொழி பிறந்த நாள்.
  1969 அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ மர்லின் மேன்சன் பிறந்த நாள்.
  1975 அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான‌ பிராட்லி கூப்பர் பிறந்த நாள்.
  1986 இந்திய திரைப்பட ந‌டிகையான‌ தீபிகா படுகோண் பிறந்த நாள்.
  1993 இந்திய சதுரங்க வீரரான லலித் பாபு பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 05-01 | January 05

  1625ல் செருமானிய வானியலாளரான‌ சைமன் மாரியசு இறப்பு நாள். (பிறப்பு-1573)
  1762ல் உருசியப் பேரரசிரான‌ எலிசவேத்தா பெட்ரோவ்னா இறப்பு நாள். (பிறப்பு-1709)
  1913ல் பிரான்சிய இயற்பியலாளரான‌ லூயி பால் கையேட்டே இறப்பு நாள். (பிறப்பு-1832)
  1933ல் அமெரிக்காவின் 30வது அரசுத்தலைவரான‌ கால்வின் கூலிஜ் இறப்பு நாள். (பிறப்பு-1872)
  1939ல் தெருமானிய உளவியலாளரும் மெய்யியலாளருமான‌ ஓட்டோ க்லேம் இறப்பு நாள். (பிறப்பு-1884)
  1943ல் அமெரிக்கத் தாவரவியலாளரும் கண்டுபிடிப்பாளருமான‌ ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் இறப்பு நாள். (பிறப்பு-1864)
  1952ல் இசுக்கொட்டிய அரசியல்வாதியும் இந்தியாவின் 46வது தலைமை ஆளுநர்ருமான‌ விக்டர் ஹோப் இறப்பு நாள். (பிறப்பு-1887)
  1970ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ மாக்ஸ் போர்ன் இறப்பு நாள். (பிறப்பு-1882)
  1973ல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட தென்னாப்பிரிக்கரான‌ வெ. துரையனார் இறப்பு நாள். (பிறப்பு-1891)
  1975ல் தமிழக எழுத்தாளரான‌ அ. சீனிவாச ராகவன் இறப்பு நாள். (பிறப்பு-1905)
  1981ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ அரால்டு இயூரீ இறப்பு நாள். (பிறப்பு-1893)
  2000ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ குமார் பொன்னம்பலம் இறப்பு நாள். (பிறப்பு-1938)
  2014ல் மொசாம்பிக்-போர்த்துக்கீச கால்பந்து வீரரான‌ எய்சேபியோ இறப்பு நாள். (பிறப்பு-1942)
  2018ல் அமெரிக்க விண்வெளி வீரரான‌ யோன் யங் இறப்பு நாள். (பிறப்பு-1930)
  2018ல் ஏல்-பாப் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தவரும் அமெரிக்க வானியலாளருமான‌ தாமசு பாப் இறப்பு நாள். (பிறப்பு-1949)
  2021ல் கேரளத் தமிழ் எழுத்தாளரான‌ ஆ. மாதவன் இறப்பு நாள். (பிறப்பு-1934)
  2022ல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரான‌ காமகோடியன் இறப்பு நாள்.

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleJanuary 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 04
  Next articleJanuary 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 07