Today Special Historical Events In Tamil | 01-01 | January 04
January 04 Today Special | January 04 What Happened Today In History. January 04 Today Whose Birthday (born) | January-04th Important Famous Deaths In History On This Day 04/01 | Today Events In History January-04th | Today Important Incident In History | தை 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-01 | தை மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.01 Varalatril Indru Nadanthathu Enna| January 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/01 | Famous People Born Today January 04 | Famous People died Today 04-01.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-01 | January 04
தியாகிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (காங்கோ சனநாயகக் குடியரசு)
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (மியான்மர், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1948)
குடியேற்ற அடக்குமுறைக்கு எதிரான வீழ்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (அங்கோலா)
உலக பிரெயில் நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-01 | January 04
871ல் ரெடிங் என்ற இடத்தில் நடந்த சமரில் ஆல்பிரட் தென்மார்க் ஆக்கிரமிப்பு இராணுவத்திடம் தோற்றார்.
1384ல் அந்தவட்டி இராச்சியத்தின் (இன்றைய பர்மாவில்) மன்னராக ராசதாரித் முடிசூடினார்.
1493ல் கொலம்பசு தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
1642ல் இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினார்.
1649ல் இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: ரம்ப் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சு மன்னரை விசாரணை செய்ய அனுமதித்தது.
1717ல் நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் உத்ரெக்ட் உடன்பாட்டைத் தக்கவைக்க முத்தரப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
1762ல் எசுப்பானியா, நாபொலி ஆகிய நாடுகள் மீது இங்கிலாந்து ஏழாண்டுப் போரை ஆரம்பித்தது.
1798ல் உதுமானியர்களினால் வலாச்சியாவின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்ட கான்சுடன்டைன் அங்கெர்லி புக்கரெஸ்ட் வந்து சேர்ந்தார்.
1847ல் சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் கைத்துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விற்றார்.
1854ல் கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1878ல் சோஃபியா நகரம் உதுமானியரின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 1879 இல் விடுதலை பெற்ற பல்காரியாவின் தலைநகரானது.
1889ல் இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.[1]
1896ல் யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1912ல் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் சாரணர் இயக்கம் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1918ல் பின்லாந்தின் விடுதலையை உருசியா, சுவீடன், செருமனி, பிரான்சு ஆகியன அங்கீகரித்தன.
1948ல் பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று குடியரசானது. யு நூ அதன் முதலாவது பிரதமர் ஆனார்.
1951ல் கொரியப் போர்: சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
1958ல் 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க வாகையாளர் போட்டியில் வெற்றி பெற்றார்.
1958ல் முதலாவது செயற்கைக் கோள் இசுப்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
1959ல் சோவியத்தின் லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
1966ல் பிரெஞ்சு மேல் வோல்ட்டாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு தேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
1976ல் வட அயர்லாந்தில் ஓர்மா நகரில் புரட்டத்தாந்து அல்சுட்டர் படையினர் ஆறு கத்தோலிக்கர்களைச் சுட்டுக் கொன்றனர். இதற்குப் பதிலடியாக, அடுத்த நாள் பத்து புரட்டத்தாந்து பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1987ல் அமெரிக்காவில் பாஸ்டன் நோக்கிச் சென்ற தொடருந்து ஒன்று வேறொன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
1989ல் லிபியாவின் இரன்டு மிக்-23 ரக விமானங்கள் அமெரிக்கக் கடற்படையின் எப்-14 வானூர்திகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1990ல் பாக்கித்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 307 பேர் உயிரிழந்தனர்.
1998ல் அல்சீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
2004ல் இசுப்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.
2010ல் உலகின் அதியுயர் கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
2018ல் தென்னாப்பிரிக்காவில் பயணிகள் தொடருந்து ஒன்று பாரவுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-01 | January 04
1643ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான ஐசாக் நியூட்டன் பிறந்த நாள். (இறப்பு-1726/27)
1785ல் செருமானிய பண்பாட்டு ஆராய்ச்சியாளரும் மொழியியலாளருமான ஜேக்கப் கிரிம் பிறந்த நாள். (இறப்பு-1863)
1809ல் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தைக் கண்டுபிடித்த பிரான்சியரான லூயி பிரெயில் பிறந்த நாள். (இறப்பு-1852)
1813ல் ஆங்கிலேய மொழியியலாளரான ஐசக் பிட்மன் பிறந்த நாள். (இறப்பு-1897)
1889ல் இந்தியாவின் 2வது தலைமை நீதிபதியான பதஞ்சலி சாஸ்திரி பிறந்த நாள். (இறப்பு-1963)
1892ல் தமிழகப் பொருளியலாளரான ஜே. சி. குமரப்பா பிறந்த நாள். (இறப்பு-1960)
1904ல் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான எஸ். எஸ். வாசன் பிறந்த நாள். (இறப்பு-1969)
1940ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளரான பிறையன் ஜோசப்சன் பிறந்த நாள்.
1941ல் இலங்கை அரசியல்வாதியான க. துரைரத்தினசிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2021)
1944ல் இலங்கை மலையக எழுத்தாளரும் ஓவியருமான மல்லிகை சி. குமார் பிறந்த நாள். (இறப்பு-2020)
1954ல் தமிழக எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் பிறந்த நாள். (இறப்பு-2018)
1963ல் நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளரும் நரம்பணுவியலாளருமான மே-பிரிட் மோசர் பிறந்த நாள்.
1964ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான பிரபா கணேசன் பிறந்த நாள்.
1984ல் தமிழ்த் திரைப்பட நடிகரான ஜீவா பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-01 | January 04
1904 அமெரிக்க வானியலாளரான அன்னா வின்லாக் இறப்பு நாள். (பிறப்பு-1857)
1908 அமெரிக்க வானியலாளரான சார்லசு அகத்தசு யங் இறப்பு நாள். (பிறப்பு-1834)
1929 தமிழக சித்தரான சேசாத்திரி சுவாமிகள் இறப்பு நாள். (பிறப்பு-1870)
1941 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளரான என்றி பெர்குசன் இறப்பு நாள். (பிறப்பு-1859)
1960 நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரான அல்பேர்ட் காம்யு இறப்பு நாள். (பிறப்பு-1913)
1961 நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் இறப்பு நாள். (பிறப்பு-1887)
1965 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க-ஆங்கிலேயக் கவிஞரரும் நாடகாசிரியருமான தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1974 தனித்தமிழ் அறிஞரும் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான அண்ணல் தங்கோ இறப்பு நாள். (பிறப்பு-1904)
1974 இந்திய அறிவியலாளரான ஜி. டி. நாயுடு இறப்பு நாள். (பிறப்பு-1893)
1976 செருமானிய-அமெரிக்க வானியலாளரான உருடோல்ப் மின்கோவ்சுகி இறப்பு நாள். (பிறப்பு-1895)
1994 தமிழகத் தமிழறிஞரான அரசியல்வாதியான திருக்குறள் வீ. முனிசாமி இறப்பு நாள். (பிறப்பு-1913)
1994 இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான ஆர். டி. பர்மன் இறப்பு நாள். (பிறப்பு-1939)
2004 தமிழக எழுத்தாளரும் வானொலி ஒலிபரப்பாளருமான வசுமதி இராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1917)
2005 இலங்கை சட்டத்தரணியும் தமிழ் ஆர்வலரும் தொழிற்சங்கவாதியுமான கிருஷ்ணா வைகுந்தவாசன் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2010 சப்பானியப் பொறியியலாளரான சுடோமு யாமகுச்சி இறப்பு நாள். (பிறப்பு-1916)
2017 இந்திய சித்தார் கலைஞரான அப்துல் ஹலீம் ஜாபர் கான் இறப்பு நாள். (பிறப்பு-1927)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan