Today Special Historical Events In Tamil | 01-01 | January 03
January 03 Today Special | January 03 What Happened Today In History. January 03 Today Whose Birthday (born) | January-03rd Important Famous Deaths In History On This Day 03/01 | Today Events In History January-03rd | Today Important Incident In History | தை 03இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 03-01 | தை மாதம் 03ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 03.01 Varalatril Indru Nadanthathu Enna| January 03 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/01 | Famous People Born Today January 03 | Famous People died Today 03-01.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 03-01 | January 03
1966 புரட்சி நினைவு நாளாக கொண்டாடப்படுகிறது. (புர்க்கினா பாசோ)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 03-01 | January 03
1431ல் பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
1496ல் லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டார் ஆனால் வெற்றியளிக்கவில்லை.
1521ல் திருத்தந்தை பத்தாம் லியோ ஆணை ஓலை மூலம் மார்ட்டின் லூதரை மதவிலக்கம் செய்தார்.
1653ல் இந்தியாவில் கிழக்கத்தியத் திருச்சபை குடியேற்றவாத போர்த்துக்கீசரிடம் இருந்து விலகியது.
1754ல் அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
1777ல் பிரின்ஸ்டன் சமரில் அமெரிக்கத் தளபதி சியார்ச் வாசிங்டன் பிரித்தானியத் தளபதி கார்ன்வாலிசு பிரபுவைத் தோற்கடித்தார்.
1815ல் ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் உருசியாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
1833ல் போக்லாந்து தீவுகள் மீது பிரித்தானியா உரிமை கோரியது.
1848ல் லைபீரியாவின் முதல் அரசுத்தலைவராக யோசப் யென்கின்சு ராபர்ட்சு பதவியேற்றார்.
1859ல் தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.
1870ல் புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
1888ல் 91 சமீ யேம்சு லிக் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் முறிவுத் தொலைநோக்கி ஆகும்.
1911ல் உருசிய துர்க்கெசுத்தானின் அல்மாத்தி நகரை 7.7 அளவு நிலநடுக்கம் தாக்கி அழித்தது.
1919ல் பாரிசு அமைதி மாநாட்டில், ஈராக் அமீர் முதலாம் பைசல், சியோனிசத் தலைவர் சைம் வெயிசுமன் உடன் பலத்தீனத்தில் யூதப் பகுதியை அமைக்க உடன்பட்டார்.
1921ல் துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.
1924ல் பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.
1925ல் இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக பெனிட்டோ முசோலினி அறிவித்தார்.
1932ல் ஒந்துராசில் இராணுவச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1932ல் பிரித்தானிய ஆட்சியாளர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.
1947ல் அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
1956ல் ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
1957ல் முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
1958ல் மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
1959ல் அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.
1961ல் பனிப்போர்: கியூபா அமெரிக்கச் சொத்துகளைத் தேசியமயமாக்கியதை அடுத்து அமெரிக்க அரசு அந்நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.
1961ல் இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1962ல் இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) பிடல் காஸ்ட்ரோவை மதவிலக்கு செய்து அறிவித்தார்.
1966ல் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தாசுகெண்டில் ஆரம்பமாயின.
1974ல் யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
1976ல் அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது.
1977ல் ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
1990ல் பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
1993ல் மாஸ்கோவில் அமெரிக்கத் தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆகியோர் போர்த்தந்திர படைக்கலக் குறைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
1994ல் முன்னாள் இனவொதுக்கல் தாயகங்களில் இருந்து ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் தென்னாப்பிரிக்காவின் குடியுரிமையைப் பெற்றனர்.
1994ல் உருசியாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் உயிரிழந்தனர்.
1995ல் விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
2002ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியப் படைகள் செங்கடலில் 50 தொன் எடையுள்ள ஆயுதங்களுடன் பாலத்தீன சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றின.
2004ல் எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் உயிரிழந்தனர்.
2015ல் போகோ அராம் போராளிகள் வட-கிழக்கு நைஜீரியாவில் பாகா நகரைக் கைப்பற்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோரைக் கொன்று குவித்தனர்.
2016ல் சியா மதகுரு நிம்மர்-அல்-நிம்மர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரான் சவூதி அரேபியாவுடனான தூதரக உறவைத் துண்டித்தது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 03-01 | January 03
கிமு 106ல் உரோமை மெய்யியலாளரும் அரசியல்வாதியுமான சிசெரோ பிறந்த நாள். (இறப்பு- கிமு 43)
1753ல் கோட்டயம்-மலபார் நாட்டின் மன்னரான பழசி இராசா பிறந்த நாள். (இறப்பு-1805)
1760ல் பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னனான கட்டபொம்மன் பிறந்த நாள். (இறப்பு-1799)
1793ல் அமெரிக்க செயற்பாட்டாளரான லுக்ரிடியா மோட் பிறந்த நாள். (இறப்பு-1880)
1831ல் இந்தியக் கவிஞரும் செயற்பாட்டாளருமான சாவித்ரிபாய் புலே பிறந்த நாள். (இறப்பு-1897)
1840ல் மதப்பரப்புனரான தந்தை தமியான பிறந்த நாள். (இறப்பு-1889)
1863ல் இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும் துறவியுமான சுவாமி துரியானந்தர் பிறந்த நாள். (இறப்பு-1922)
1883ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான கிளமெண்ட் அட்லீ பிறந்த நாள். (இறப்பு-1967)
1892ல் ஆங்கிலேய எழுத்தாளரான ஜே. ஆர். ஆர். டோல்கீன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1906ல் அமெரிக்க வானியலாளரும் வானியற்பியலாளரான வில்லியம் வில்சன் மார்கன் பிறந்த நாள். (இறப்பு-1994)
1920ல் இந்திய தேசிய ராணுவ வீரரான அப்பாஸ் அலி பிறந்த நாள். (இறப்பு-2014)
1925ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான புஷ்பவல்லி பிறந்த நாள். (இறப்பு-1991)
1929ல் இத்தாலிய இயக்குநரும் தயாரிப்பாளருமான செர்சோ லியோனி பிறந்த நாள். (இறப்பு-1989)
1930ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் மோர்சிங் இசைக் கலைஞருமான ஐ. எஸ். முருகேசன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1945ல் இந்திய தொழிலதிபரான நாராயணசாமி சீனிவாசன் பிறந்த நாள்.
1953ல் மாலைத்தீவின் 5வது அரசுத்தலைவரான முகமது வாகித் அசன் பிறந்த நாள்.
1956ல் அமெரிக்க-ஆத்திரேலிய நடிகரான மெல் கிப்சன் பிறந்த நாள்.
1966ல் இந்தியத் துடுப்பாளரான செட்டன் சர்மா பிறந்த நாள்.
1969ல் செருமானிய பார்முலா 1 வீரரான மைக்கேல் சூமாக்கர் பிறந்த நாள்.
1976ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான நிக்கோலஸ் கோன்சலேஸ் பிறந்த நாள்.
1990ல் தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும் பின்னணிப் பாடகியுமான சைந்தவி பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 03-01 | January 03
236ல் திருத்தந்தையான அந்தேருஸ் இறப்பு நாள்.
1641ல் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளருமான செருமையா அராக்சு இறப்பு நாள். (பிறப்பு-1618)
1795ல் ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளரான சோசியா வெட்ச்வூட் இறப்பு நாள். (பிறப்பு-1730)
1871ல் இந்திய மதகுருவும் புனிதருமான குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா இறப்பு நாள். (பிறப்பு-1805)
1972ல் தமிழக உரையாசிரியரும் நாடகாசிரியருமான பொ. வே. சோமசுந்தரனார் இறப்பு நாள். (பிறப்பு-1909)
1992ல் தமிழக அரசியல்வாதியான ஓ. வி. அழகேசன் இறப்பு நாள். (பிறப்பு-1911)
1997ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கெனமன் இறப்பு நாள். (பிறப்பு-1917)
2002ல் இந்தியப் பொறியாளரான சதீஷ் தவான் இறப்பு நாள். (பிறப்பு-1920)
2013ல் இந்திய வயலின் கலைஞரான எம். எஸ். கோபாலகிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1931)
2014ல் தமிழ்ப் பேராசிரியரான ம. சா. அறிவுடைநம்பி இறப்பு நாள். (பிறப்பு-1954)
2018ல் இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளரும் சமூக, அரசியல் செயற்பாட்டாளருமான அ. சிவானந்தன் இறப்பு நாள். (பிறப்பு-1923)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan