February 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 14

0

Today Special Historical Events In Tamil | 14-02 | February 14

February 14 Today Special | February 14 What Happened Today In History. February 14 Today Whose Birthday (born) | February-14th Important Famous Deaths In History On This Day 14/02 | Today Events In History February 14th | Today Important Incident In History | மாசி 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-02 | மாசி மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.02 Varalatril Indru Nadanthathu Enna| February 14 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 14/02 | Famous People Born Today 14.02 | Famous People died Today 14-02.

Today Special in Tamil 14-02
Today Events in Tamil 14-02
Famous People Born Today 14-02
Famous People died Today 14-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-02 | February 14

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் நாளாக கொண்டாடப்படுகிறது. (ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)
வேலன்டைன் நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-02 | February 14

748ல் அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர்.
1014ல் திருத்தந்தை எட்டாம் பெனடிக்டு செருமனி, இத்தாலியின் மன்னர் இரண்டாம் என்றியை புனித உரோமைப் பேரரசராக்கினார்.
1076ல் திருத்தந்தை ஏழாம் கிரகோரி புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியை மதவிலக்கம் செய்தார்.
1130ல் இரண்டாம் இனசென்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1349ல் பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் கிட்டத்தட்ட 2,000 யூதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
1400ல் இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு இறந்தார். இவர் பட்டினியால் இறந்ததாக நம்பப்படுகிறது.
1556ல் பேரரசர் அக்பர் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
1779ல் அவாயில் ஆதிவாசிகளால் கப்டன் ஜேம்ஸ் குக் கொல்லப்பட்டார்.
1797ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஜிப்ரால்ட்டர் அருகே இடம்பெற்ற கடல்சமரில் ஒரசியோ நெல்சன் தலைமையில் பிரித்தானியக் கடற்படை எசுப்பானியக் கடற்படையை வென்றது.
1804ல் உதுமானியப் பேரரசுக்கு எதிரான செர்பியர்களின் முதலாவது எழுச்சி கரஜோட்சே என்பவனின் தலைமையில் இடம்பெற்றது.
1815ல் கண்டிப் போர்கள்: கண்டி இராச்சியத்தைப் பிரித்தானியர் கைப்பற்றினர். கண்டி ஒப்பந்தம் மார்ச் 2 இல் கையெழுத்திடப்பட்டது.
1859ல் ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1876ல் எலீசா கிறே, அலெக்சாண்டர் கிரகம் பெல் இருவரும் வேறு வேறாக தொலைபேசிக்காண காப்புரிமம் பெற விண்ணப்பித்தனர்.
1879ல் சிலி இராணுவத்தினர் பொலிவியாவின் அன்டோபொகஸ்டா துறைமுக நகரைக் கைப்பற்றியதை அடுத்து பசிபிக் போர் வெடித்தது.
1899ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமெரிக்க நடுவண் தேர்தல்களில் பயன்படுத்துவதற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது.
1900ல் தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
1912ல் அரிசோனா 48வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1918ல் சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாட்காட்டியின் படி பெப்ரவரி 1 ).
1919ல் போலந்து-சோவியத் போர் ஆரம்பமானது.
1924ல் ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1929ல் சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் சப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் ரசுத்தோவ் நகர் நாட்சிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: துனிசியப் போர்த்தொடர்: தூனிசியாவில் நேச நாடுகளின் நிலைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பித்தன.
1944ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கி ஒன்று மலாக்கா நீரிணையில் செருமனி-இத்தாலிய நீர்மூழ்கியத் தாக்கி மூழ்கடித்தது.
1946ல் இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
1949ல் இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.
1961ல் 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1966ல் அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1979ல் ஆப்கானித்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்துறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
1981ல் டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் உயிரிழந்தனர்.
1987ல் யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1987ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1989ல் ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
1989ல் யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
1989ல் சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
1990ல் பெங்களூரில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
1990ல் வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.
1998ல் கமரூனில் யாவுண்டே நகரில் எண்ணெய்த் தாங்கித் தொடருந்து சரக்குத் தொடருந்துடன் மோதியதில் எரிநெய் கசிந்து வெடித்ததில், 120 பேர் உயிரிழந்தனர்.
1998ல் கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
2000ல் நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
2004ல் மாஸ்கோ அருகே பூங்கா ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்ததில் 25 உயிரிழந்தனர்.
2005ல் கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
2005ல் லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005ல் பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு 151 பேர் காயமடைந்தனர்.
2011ல் அரேபிய வசந்தம்: பகுரைன் எழுச்சி ஆரம்பமானது.
2017ல் செயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
2018ல் தென்னாப்பிரிக்காவின் அரசுத்தலைவர்பதவியில் இருந்து யாக்கோபு சூமா விலகினார்.
2018ல் அமெரிக்காவில் மயாமியின் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
2019ல் புல்வாமா தாக்குதல்: இந்தியாவின், காசுமீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்சு-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், மத்திய சேமக் காவல் படையைச் சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டு, 35 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-02 | February 14

1483ல் முகலாயப் பேரரசரான‌ பாபர் பிறந்த நாள். (இறப்பு-1530)
1745ல் மராட்டியப் பேரரசின் நான்காம் தலைமை அமைச்சரான‌ மாதவராவ் பிறந்த நாள். (இறப்பு-1772)
1838ல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான‌ மார்கரெட் ஈ. நைட் பிறந்த நாள். (இறப்பு-1914)
1869ல் நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளரான‌ சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன் பிறந்த நாள். (இறப்பு-1959)
1896ல் பிரித்தானிய வானியற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ ஆர்த்தர் மில்னி பிறந்த நாள். (இறப்பு-1950)
1898ல் சுவிட்சர்லாந்து-அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ பிரிட்சு சுவிக்கி பிறந்த நாள். (இறப்பு-1974)
1901ல் தமிழக இசையியல் அறிஞரான‌ பி. சாம்பமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-1973)
1904ல் சோவியத்-உருசிய வானியற்பியலாளரான‌ போரிசு வொரந்த்சோவ்-வெல்யமினோவ் பிறந்த நாள். (இறப்பு-1994)
1914ல் தமிழக மிருதங்கக் கலைஞரான‌ இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி பிறந்த நாள். (இறப்பு-1998)
1925ல் இந்திய அரசியல்வாதியும் சமூகச் செயற்பாட்டாளருமான‌ மோகன் தாரியா பிறந்த நாள். (இறப்பு-2013)
1929ல் இந்தியப் புவியியற்பியலாளரான‌ தேவேந்திரலால் பிறந்த நாள். (இறப்பு-2012)
1933ல் இந்திய நடிகையான‌ மதுபாலா பிறந்த நாள். (இறப்பு-1969)
1939ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ யூஜின் ஃபாமா பிறந்த நாள்.
1943ல் இந்தியத் தொழிற்சங்கத் தலைவரான‌ சங்கர் குஹா நியோகி பிறந்த நாள். (இறப்பு-1991)
1952ல் இந்திய அரசியல்வாதியான‌ சுஷ்மா சுவராஜ் பிறந்த நாள். (இறப்பு-2019)
1990ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ தீக்‌ஷா செத் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 14-02 | February 14

269ல் உரோமைக் கத்தோலிக்க ஆயரும் புனிதருமான‌ புனித வேலண்டைன் இறப்பு நாள். (பிறப்பு-176)
1405ல் துருக்கிய-மங்கோலியப் பேரரசரான‌ தைமூர் இறப்பு நாள். (பிறப்பு-1336)
1779ல்ஆங்கிலேயக் கப்பற் தளபதியும் நாடுகாண் பயணியுமான‌ ஜேம்ஸ் குக் இறப்பு நாள். (பிறப்பு-1728)
1943ல் உருசிய-செருமானிய கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ டேவிடு இல்பேர்ட்டு இறப்பு நாள். (பிறப்பு-1862)
1950ல் அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ கார்ல் குதே யான்சுகி இறப்பு நாள். (பிறப்பு-1905)
1964ல் இந்திய அரசியல்வாதியான‌ வி. டி. கிருஷ்ணமாச்சாரி இறப்பு நாள். (பிறப்பு-1881)
1975ல் ஆங்கிலேயப் புதின எழுத்தாளரான‌ பி. ஜி. வுட்ஹவுஸ் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1968ல் ஈழத்து எழுத்தாளரான‌ அ. ந. கந்தசாமி இறப்பு நாள். (பிறப்பு-1924)
1992ல் தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முதலாவது ஆயரான‌ எஸ். குலேந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1900)
1995ல் பர்மாவின் 1வது பிரதமரான‌ யு நூ இறப்பு நாள். (பிறப்பு-1907)
2018ல் சிம்பாப்வேயின் 2வது பிரதமரான‌ மோர்கன் சுவாங்கிராய் இறப்பு நாள். (பிறப்பு-1952)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 13
Next articleஇன்றைய ராசிபலன் 12.10.2022 Today Rasi Palan 12-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!