February 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 06

0

Today Special Historical Events In Tamil | 06-02 | February 06

February 06 Today Special | February 06 What Happened Today In History. February 06 Today Whose Birthday (born) | February-6th Important Famous Deaths In History On This Day 06/02 | Today Events In History February 6th | Today Important Incident In History | மாசி 05 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 05-02 | மாசி மாதம் 05ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.02 Varalatril Indru Nadanthathu Enna| February 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/02 | Famous People Born Today 06.02 | Famous People died Today 06-02.

Today Special in Tamil 06-02
Today Events in Tamil 06-02
Famous People Born Today 06-02
Famous People died Today 06-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-02 | February 06

வைத்தாங்கி நாளாக கொண்டாடப்படுகிறது. (நியூசிலாந்து நிறுவிய நாள், 1840)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-02 | February 06

60ல் கிழமை முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொம்பெயியில் கண்டெடுக்கப்பட்ட சுவரடி ஓவியம் ஒன்று இந்நாளை ஞாயிற்றுக் கிழமையாகக் காட்டியது.
1658ல் சுவீடன் மன்னன் பத்தாம் குஸ்டாவின் படைகள் உறைந்த கடலைத் தாண்டி டென்மார்க்கை அடைந்தன.
1685ல் இரண்டாம் சார்லசு மன்னரின் இறப்பை அடுத்து அவரது சகோதரர் இரண்டாம் யேம்சு ஐக்கிய இராச்சியத்தின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1788ல் மாசச்சூசெட்ஸ் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 6-வது மாநிலமானது.
1792ல் மூன்றாவது ஆங்கிலேய-மைசூர் போர்: சீரங்கப்பட்டினம் முற்றுகையின் போது திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார்.
1806ல் கரிபியனில் நடந்த சான் டொமிங்கோ சமரில் பிரித்தானியக் கடற்படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1819ல் சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
1820ல் முதல் தொகுதி 86 ஆபிரிக்க அமெரிக்கர்கள் லைபீரியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்காக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டனர்.
1840ல் நியூசிலாந்தில் வைத்தாங்கி ஒப்பந்தம் பிரித்தானிய அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் எட்டப்பட்டது. பிரித்தானியக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது.
1851ல் ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப் பெரும் காட்டுத்தீ விக்டோரியா மாநிலத்தில் பரவியது. 12 பேர் உயிரிழந்தனர்.
1863ல் இலங்காபிமானி (Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் டபிள்யூ. சி. கதிரவேற்பிள்ளை என்பவரால் வெளியிடப்பட்டது.
1899ல் எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கை (1898) அமெரிக்க மேலவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1900ல் நிரந்தர நடுவர் நீதிமன்றம் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் நிறுவப்பட்டது.
1918ல் 30 வயதிற்கு மேற்பட்ட குறைந்தபட்ச சொத்துரிமை கொண்ட பிரித்தானியப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1951ல் அமெரிக்காம், நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் உயிரிழந்தனர், 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1952ல் ஆறாம் ஜோர்ஜின் இறப்பை அடுத்து இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியம் உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு அரசியானார்.
1958ல் செருமனி, மியூனிக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் மான்செஸ்டர் யுனைட்டட் உதைபந்தாட்ட அணியின் 8 பேர் உயிரிழந்தனர்.
1959ல் டெக்சாசு இன்ஸ்ட்ருமெண்ட்சு நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி தொகுசுற்றுக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
1959ல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1978ல் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியை வரலாறு காணாத இடம்பெற்ற பனிப்புயல் தாக்கியது.
1989ல் போலந்தில் ஆரம்பமான வட்டமேசை மாநாட்டில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கம்யூனிச ஆட்சிகளைக் கவிழ்ப்பது குறிந்து ஆராயப்பட்டது.
1996ல் அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 189 பேரும் உயிரிழந்தனர்.
2000ல் உருசியா குரோசுனி, செச்சினியா ஆகியவற்றைக் கைப்பற்றியது.
2004ல் மாஸ்கோவில் சுரங்க தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
2016ல் தாய்வான் நிலநடுக்கத்தில் 117 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-02 | February 06

1465ல் இத்தாலியக் கணிதவியலாளரான‌ டெல் ஃபெர்ரோ பிறந்த நாள். (இறப்பு-1526)
1665ல் பெரிய பிரித்தானியாவின் அரசியான‌ ஆன் பிறந்த நாள். (இறப்பு-1714)
1814ல் தமிழகத்தில் மறை மற்றும் தமிழ்ப் பணியாற்றிய செருமனியக் கிறித்தவப் பாதிரியாரான‌ காரல் கிரவுல் பிறந்த நாள். (இறப்பு-1864)
1879ல் ஆங்கிலேய அரசியல்வாதியும் பிரித்தானியாவின் இந்தியாவுக்கான செயலாளருமான‌ மாண்டேகு பிறந்த நாள். (இறப்பு-1924)
1884ல் புதுவை விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான‌ அரங்கசாமி நாயக்கர் பிறந்த நாள். (இறப்பு-1943)
1890ல் பாக்கித்தானிய அரசியல்வாதியும் விடுதலைப் போராட்ட வீரருமான‌ கான் அப்துல் கப்பார் கான் பிறந்த நாள். (இறப்பு-1988)
1892ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ வில்லியம் பாரி மர்பி பிறந்த நாள். (இறப்பு-1987)
1911ல் ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவரான‌ ரானல்ட் ரேகன் பிறந்த நாள். (இறப்பு-2004)
1912ல் இட்லரின் மனைவியான‌ இவா பிரான் பிறந்த நாள். (இறப்பு-1945)
1921ல் உருசிய-சோவியத் வானியலாளரான‌ சாலமன் பிக்கெல்னர் பிறந்த நாள். (இறப்பு-1975)
1923ல் அமெரிக்க வானியலாளரான‌ எட்வார்டு எமர்சன் பர்னார்டு பிறந்த நாள். (இறப்பு-1857)
1932ல் இந்திய வங்கக் கவிஞரான‌ சங்கர் கோசு பிறந்த நாள்.
1935ல் தமிழக எழுத்தாளரான‌ மாரி. அறவாழி பிறந்த நாள். (இறப்பு-1999)
1945ல் ஜமைக்கா பாடகரும் கித்தார் இசைக்கலைஞருமான‌ பாப் மார்லி பிறந்த நாள். (இறப்பு-1981)
1956ல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் நடிகருமான‌ பிறைசூடன் பிறந்த நாள்.
1975ல் ஆர்க்குட் சமூக வலையமைப்பைக் கண்டுபிடித்த துருக்கியரான ஆர்க்குட் புயுக்கோக்டன் பிறந்த நாள்.
1983ல் இந்தியத் துடுப்பாளரான சிறிசாந்த் பிறந்த நாள்.
1986ல் அமெரிக்க நடிகரான‌ டேன் டிஹான் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-02 | February 06

1685ல் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு இறப்பு நாள். (பிறப்பு-1630)
1804ல் ஆங்கிலேய வேதியியலாளரான‌ சோசப்பு பிரீசிட்லி இறப்பு நாள். (பிறப்பு-1733)
1827ல் கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான‌ சியாமா சாஸ்திரிகள் இறப்பு நாள். (பிறப்பு-1762)
1918ல் ஆத்திரிய ஓவியரான‌ கஸ்டவ் கிளிம்ட் இறப்பு நாள். (பிறப்பு-1862)
1920ல் அயர்லாந்து இந்தியவியலாளரும் வரலாற்றாளருமான‌ வின்சென்ட் ஸ்மித் இறப்பு நாள். (பிறப்பு-1843)
1923ல் அமெரிக்க வானியலாளரான‌ எட்வார்டு எமர்சன் பர்னார்டு இறப்பு நாள். (பிறப்பு-1857)
1931ல் இந்திய அரசியல்வாதியான‌ மோதிலால் நேரு இறப்பு நாள். (பிறப்பு-1861)
1952ல் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1964ல் பிலிப்பீன்சின் 1வது அரசுத்தலைவரான‌ எமிலியோ அகுயினால்டோ இறப்பு நாள். (பிறப்பு-1869)
1973ல் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ ஐரா சுப்பிரேகு போவன் இறப்பு நாள். (பிறப்பு-1898)
2022ல் இந்தியப் பின்னணிப் பாடகியான‌ லதா மங்கேஷ்கர் இறப்பு நாள். (பிறப்பு-1929)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையை சேர்ந்த youtube பிரபலியம் கலந்து கொள்கிறார்.
Next articleஇன்றைய ராசிபலன் 11.10.2022 Today Rasi Palan 11-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!