February 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 01

0

Today Special Historical Events In Tamil | 01-02 | February 01

February 01 Today Special | February 01 What Happened Today In History. February 01 Today Whose Birthday (born) | February-1st Important Famous Deaths In History On This Day 01/02 | Today Events In History February 01st | Today Important Incident In History | மாசி 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-02 | மாசி மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.02 Varalatril Indru Nadanthathu Enna| February 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/02 | Famous People Born Today 01.02 | Famous People died Today 01-02.

Today Special in Tamil 01-02
Today Events in Tamil 01-02
Famous People Born Today 01-02
Famous People died Today 01-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-02 | February 01

குடியரசு நினைவு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அங்கேரி)
அடிமை ஒழிப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மொரிசியசு)
தேசிய விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அமெரிக்கா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-02 | February 01

1327ல் பதின்ம வயது மூன்றாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். ஆனால் அவனது தாய் இசபெல்லாவும் தாயின் காதலன் ரொஜர் மோர்ட்டிமரும் நாட்டை ஆண்டனர்.
1329ல் பொகேமியா மன்னர் ஜான் லித்துவேனியாவில் முக்கிய கோட்டையைக் கைப்பற்றி, அதன் 6,000 பாதுகாப்புப் படையினரை திருமுழுக்கிட்டான்.
1662ல் ஒன்பது-மாத முற்றுகையின் பின்னர் சீனத் தளபதி கோசிங்கா தைவான் தீவைக் கைப்பற்றினான்.
1788ல் ஐசாக் பிறிக்ஸ், வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1793ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து மீது பிரான்சு போரைத் தொடுத்தது.
1814ல் பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
1832ல் ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி சேவை (mail-coach) இலங்கையில் கண்டியில் ஆரம்பமாகியது.
1835ல் மொரிசியசில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சசு மாநிலம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1864ல் டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
1880ல் யாழ்ப்பாணத்திற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் முதலாவது தபால் வண்டி சேவையை ஆரம்பித்தது.
1884ல் ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
1893ல் தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் மேற்கு ஒரேஞ்சு நகரில் கட்டி முடித்தார்.
1908ல் போர்த்துக்கல் மன்னன் முதலாம் கார்லோசு, அவனது மகன் இளவரசர் லூயிஸ் பிலிப் ஆகியோர் லிஸ்பன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1918ல் உருசியா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1924ல் சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1942ல் அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ வெளிநாட்டு வானொலி வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
1946ல் நோர்வேயின் திறிகுவே இலீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1946ல் அங்கேரி நாடாளுமன்றம் ஒன்பது நூற்றாண்டுப் பழமையான மன்னராட்சியை நீக்கி குடியரசாக அறிவித்தது.
1953ல் வடகடல் வெள்ளப்பெருக்கு நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளைத் தாக்கியது.
1958ல் எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.
1972ல் கோலாலம்பூர் மலேசியாவின் மன்னரால் மாநகரமாக அறிவிக்கப்பட்டது.
1974ல் பிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் உயிரிழந்தனர், 293 பேர் காயமடைந்தனர்.
1979ல் 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி தெகுரான் திரும்பினார்.
1991ல் லாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலைய ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதில் 34 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.
1992ல் போபால் பேரழிவு: யூனியன் கார்பைட்டின் முன்னாள் முதன்மைச் செயலர் வாரன் அண்டர்சன் ஒரு தலைமறைவான குற்றவாளி என போபால் நீதிமன்றம் அறிவித்தது.
1998ல் கிளிநொச்சித் தாக்குதல், 1998: கிளிநொச்சி நகரம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாகியது.
2002ல் சனவரி 23 இல் கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல் கடத்தல்காரர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
2003ல் கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
2004ல் சவூதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் உயிரிழந்தனர், 244 பேர் காயமடைந்தனர்.
2005ல் நேபாள மன்னர் ஞானேந்திரா இராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
2005ல் கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.
2007ல் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத் தாக்குதலில் பேருந்து ஒன்று சிக்கியதில் 2 அதிரடிப்படையினர் 6 காவற்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.
2012ல் எகிப்தில் கால்பந்து அரங்கு ஒன்றில் இரண்டு அணி ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
2013ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக உயரமான கட்டடம் ஷார்டு பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
2021ல் மியான்மர் இராணுவப் புரட்சியில் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-02 | February 01

1707ல் வேல்சு இளவரசரான‌ பிரெடரிக் பிறந்த நாள். (இறப்பு-1751)
1844ல் அமெரிக்க உளவியலாளரான‌ கிரான்வில் ஸ்டான்லி ஹால் பிறந்த நாள். (இறப்பு-1924)
1873ல் தமிழ் நாடகத் தந்தையான‌ பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள். (இறப்பு-1964)
1894ல் அமெரிக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான‌ ஜான் போர்டு பிறந்த நாள். (இறப்பு-1973)
1901ல் அமெரிக்க நடிகரான‌ கிளார்க் கேபிள் பிறந்த நாள். (இறப்பு-1960)
1902ல் அமெரிக்கக் கவிஞரான‌ லாங்ஸ்ரன் ஹியூஸ் பிறந்த நாள். (இறப்பு-1967)
1905ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ எமீலியோ சேக்ரே பிறந்த நாள். (இறப்பு-1989)
1930ல் இந்திய இதழாளரும் நூலாசிரியருமான‌ இந்தர் மல்கோத்ரா பிறந்த நாள். (இறப்பு-2016)
1931ல் உருசியாவின் 1வது அரசுத்தலைவரான‌ போரிஸ் யெல்ட்சின் பிறந்த நாள். (இறப்பு-2007)
1936ல் தமிழகத் தமிழறிஞரான‌ பொ. ம. இராசமணி பிறந்த நாள். (இறப்பு-2009)
1957ல் இந்திய நடிகரான‌ ஜாக்கி செராப் பிறந்த நாள்.
1961ல் தமிழக அரசியல்வாதியான‌ செ. குரு பிறந்த நாள். (இறப்பு-2018)
1982ல் பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரரான‌ சோயிப் மாலிக் பிறந்த நாள்.
1985ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ கோபிகா பிறந்த நாள்.
1992ல் மராத்தி நடிகையான‌ வைதேகி பரசுராமி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-02 | February 01

772ல் திருத்தந்தையான‌ மூன்றாம் ஸ்தேவான் இறப்பு நாள். (பிறப்பு-720)
1851ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ மேரி செல்லி இறப்பு நாள். (பிறப்பு-1797)
1876ல் தமிழறிஞரான‌ மீனாட்சிசுந்தரம் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1815)
1882ல் இந்திய நில அளவியலாளரான‌ நயின் சிங் ராவத் இறப்பு நாள். (பிறப்பு-1830)
1903ல் ஆங்கிலோ-அயர்லாந்து இயற்பியலாளரும் கணிதவியலாளரும் அரசியல்வாதியுமான‌ ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1819)
1905ல் இத்தாலிய இயற்பியலாளரான‌ எமீலியோ சேக்ரே இறப்பு நாள். (பிறப்பு-1989)
1939ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தமிழகத்தின் முதல் பேசும் பட ஒலிக் கலையகத்தை அமைத்தவருமான‌ ஏ. நாராயணன் இறப்பு நாள். (பிறப்பு-1900)
1942ல் சைவத் துறவியும் பேச்சாளரும் உரையாசிரியருமான‌ ஞானியார் அடிகள் இறப்பு நாள். (பிறப்பு-1873)
1958ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ கிளிண்டன் ஜோசப் டேவிசன் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1976ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ வெர்னர் ஐசன்பர்க் இறப்பு நாள். (பிறப்பு-1901)
1999ல் துருக்கியப் பாடகரான‌ பாரிசு மான்கோ இறப்பு நாள். (பிறப்பு-1943)
2002ல் அமெரிக்க யூதப் பத்திரிகையாளரான‌ டேனியல் பெர்ல் இறப்பு நாள். (பிறப்பு-1963)
2003ல் இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கொலம்பியா விண்ணோட வீராங்கனையுமான‌ கல்பனா சாவ்லா இறப்பு நாள். (பிறப்பு-1961)
2008ல் இந்திய எழுத்தாளரும் இதழாளருமான‌ ஆர். கே. கரஞ்சியா இறப்பு நாள். (பிறப்பு-1912)
2012ல் நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளரான‌ விஸ்லவா சிம்போர்ஸ்கா இறப்பு நாள். (பிறப்பு-1923)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 31
Next articleFebruary 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 02