December 31 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 31

0

Today Special Historical Events In Tamil | 31-12 | December 31

December 31 Today Special | December 31 What Happened Today In History. December 31 Today Whose Birthday (born) | December-31st Important Famous Deaths In History On This Day 31/12 | Today Events In History December 31st | Today Important Incident In History | மார்கழி 31 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 31-12 | மார்கழி மாதம் 31ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 31.12 Varalatril Indru Nadanthathu Enna| December 31 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 31/12 | Famous People Born Today 31.12 | Famous People died Today 31-12.

Today Special in Tamil 31-12
Today Events in Tamil 31-12
Famous People Born Today 31-12
Famous People died Today 31-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 31-12 | December 31

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 31-12 | December 31

535ல் பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.
1225ல் வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.
1600ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1687ல் நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
1695ல் இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
1775ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: கியூபெக் சமரில் பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையின் தாக்குதலை முறியடித்தன.
1847ல் ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
1857ல் விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
1879ல் வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
1881ல் இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1923ல் லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அங்கேரி நாட்சி செருமனி மீது போரை அறிவித்தது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.
1946ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1963ல் மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.
1965ல் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1968ல் உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1981ல் கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1983ல் நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.
1984ல் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
1986ல் புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயமடைந்தனர்.
1987ல் ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991ல் சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் அனைத்து அரசு நிறுவனங்களும் செயலிழந்தன.
1992ல் செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.
1994ல் முதலாம் செச்சினியப் போர்: உருசிய இராணுவம் குரோசுனி மீது தாக்குதலை ஆரம்பித்தது.
1994ல் பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
1999ல் 20-ஆம் நூற்றாண்டு, 2-ஆம் ஆயிரமாண்டு ஆகியவற்றின் கடைசி நாள்.
1999ல் உருசியாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.
1999ல் 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
2004ல் உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2006ல் ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
2009ல் நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.
2011ல் நாசா இரண்டு கிரெயில் செயற்கைக்கோள்களின் முதலாவதை நிலாவின் சுற்றுவட்டத்துள் செலுத்தியது.
2014ல் சாங்காயில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர், 49 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 31-12 | December 31

1491ல் பிரான்சிய கடற்படை அதிகாரியும் நாடுகாண் பயணியுமான‌ இழ்சாக் கார்ட்டியே பிறந்த நாள். (இறப்பு-1557)
1514ல் பெல்ஜிய உடற்கூற்றியலாளரும் மருத்துவருமான‌ ஆண்ட்ரியசு வெசாலியசு பிறந்த நாள். (இறப்பு-1564)
1738ல் பிரித்தானிய இந்தியாவின் 3வது தலைமை ஆளுநரான‌ காரன்வாலிஸ் பிறந்த நாள். (இறப்பு-1805)
1815ல் அமெரிக்க இராணுவ அதிகாரியும் பொறியியலாளரான‌ ஜார்ஜ் கார்டன் மீடு பிறந்த நாள். (இறப்பு-1872)
1864ல் அமெரிக்க வானியலாளரான‌ இராபர்ட் கிராண்ட் ஐத்கென் பிறந்த நாள். (இறப்பு-1951)
1869ல் பிரான்சிய ஓவியரும் சிற்பியுமான‌ ஆன்றி மட்டீசு பிறந்த நாள். (இறப்பு-1954)
1878ல் கனடிய தொழிலதிபரான‌ எலிசபெத் ஆர்டன் பிறந்த நாள். (இறப்பு-1966)
1905ல் அமெரிக்க வான்யலாளரான‌ எலன் தோடுசன் பிரின்சு பிறந்த நாள். (இறப்பு-2002)
1910ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரும் டி. எஸ். துரைராஜ் பிறந்த நாள். (இறப்பு-1986)
1929ல் தமிழறிஞருமான‌ ச. வே. சுப்பிரமணியன் பிறந்த நாள். (இறப்பு-2017)
1935ல் சவூதி அரேபிய மன்னருமான‌ சல்மான் பிறந்த நாள்.
1943ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ ஜான் டென்வர் பிறந்த நாள். (இறப்பு-1997)
1943ல் ஆங்கிலேய நடிகரான‌ பென் கிங்ஸ்லி பிறந்த நாள்.
1947ல் தமிழக எழுத்தாளரான‌ நாஞ்சில் நாடன் பிறந்த நாள்.
1989ல் இந்தியத் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான‌ பிரியா பவானி சங்கர் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 31-12 | December 31

335ல் திருத்தந்தையான‌ முதலாம் சில்வெஸ்தர் இறப்பு நாள்.
1691ல் அயர்லாந்து வேதியியலாளரும் இயற்பியலாளருமான‌ இராபர்ட் வில்லியம் பாயில் இறப்பு நாள். (பிறப்பு-1627)
1719ல் ஆங்கிலேய வானியலாளரான‌ ஜான் பிளேம்சுடீடு இறப்பு நாள். (பிறப்பு-1646)
1876ல் பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரியும் பிரான்சியப் புனிதருமான‌ கத்தரீன் லபோரே இறப்பு நாள். (பிறப்பு-1806)
1913ல் அமெரிக்க வானியலாளரான‌ சேத் கார்லோ சாண்டிலர் இறப்பு நாள். (பிறப்பு-1846)
1940ல் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் நாடக கலைஞருமான‌ விஸ்வநாத தாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1886)
1973ல் உருசிய-அமெரிக்க வானியலாளரான‌ அலெக்சாந்தர் விசோத்சுகி இறப்பு நாள். (பிறப்பு-1888)
1984ல் இந்திய இயற்பியலாளரான‌ கே. ஆர். ராமநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1893)
1986ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ ராஜ் நாராயணன் இறப்பு நாள். (பிறப்பு-1917)
1994ல் ஈழத்து இடதுசாரி அரசியல்வாதியும் தொழிற்சங்கவாதியுமான‌ கரவை கந்தசாமி இறப்பு நாள்.
2001ல் தமிழக எழுத்தாளரான‌ தொ. மு. சிதம்பர ரகுநாதன் இறப்பு நாள். (பிறப்பு-1923)
2011ல் இந்திய மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான‌ இராணி ஜெத்மலானி இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 30
Next articleFebruary 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 01