ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் முக்கிய கிரகப் பெயர்ச்சி எப்படி ஒருவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சியின் காரணமாக எந்த ராசியெல்லாம் நற்பலனையும், கெடுபலனையும் பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம்.
2022 புத்தாண்டு தொடக்கம்
12 ஏப்ரல் 2022 அன்று ராகு – கேது பெயர்ச்சி நிகழ்கிறது. இதில் ராகு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும், கேது விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆவார்கள்.
13 ஏப்ரல் 2022 அன்று குரு பகவான் அதிசார பெயர்ச்சியாக கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
29 ஏப்ரல் 2022 அன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.
5 ஜூன் 2022 அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சியாக கும்பத்தில் இருப்பார்.
12 ஜூலை 2022 அன்று சனி பகவான் கும்பத்திலிருந்து வக்ர பெயர்ச்சியாக மகரத்தை அடைவார்.
23 அக்டோபர் 2022 அன்று சனி மகரத்தில் மீண்டும் நேர்கதியாக பெயர்ச்சி அடைவார்.
இந்த கிரகப் பெயர்ச்சியில் சனி பகவானின் நகர்வு நிகழ்வு மிக முக்கிய பங்கு வகிப்பதாக அமைகிறது.
சனி அதிசார பெயர்ச்சி 2022 ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக நுழைய உள்ளார். இதுவும் சனி பகவானின் சொந்த ராசியாகும்.
30 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த பெயர்ச்சி நிகழ உள்ளது.
தனுசு
துலாம்
கன்னி
மிதுனம்
ரிஷபம்
மேஷம்
12 ஜூலை 2022 வரை இந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
கெடுபலன்கள் பெற உள்ள ராசிகள் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வதால் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.
அதோடு கடக ராசிக்கு அஷ்டம சனி பலன் உண்டாகும். விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி பலன் உண்டாகும். சிம்ம ராசிக்கு கண்டக சனி பலன் ஏற்படும்.
கும்பத்திற்கு செல்வதால் தனுசு ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதோடு, மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் சனி கெடுபலனிலிருந்து நிவாரணம் பெற்று பல நன்மைகளை அடைவார்கள்.