30 வயது பெண்ணை கடத்தி சீரழித்து வீடியோ வெளியிட்ட அரக்கர்கள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

0
367

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தோழியுடன் கோவிலுக்கு செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து ஒரு பெண்ணை கடத்திச் சென்ற ஐந்து பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் இந்நிலையில் அந்தப் பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் மே 26 ஆம் தேதி அன்று தனது தோழியுடன் அருகில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் விட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்து நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜிதேந்திர பாத் 20 கோவிந்த் பாத்20, தினேஸ் பாத் 24, மகேந்திரா பாத் 22 ஆகிய நான்கு நபர்களை கைது செய்து போலீசார் அவர்கள் மீது பாலியல் குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஐந்தாவது குற்றவாளியான சஞ்சய் பாத் என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக கொலை செய்து, வன்புனர்வு செய்யும் சைக்கோ!
Next articleபயன் மிக்க சில‌ சித்த மருத்துவக் குறிப்புகள்!