2022 ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை! எப்போது ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது!

0

2022 ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்ட பலனைப் பெறப்போகும் ராசிகள் எவை! எப்போது ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது!

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி (12.04.2022) மதியம் 1.38 மணியளவில் ராகு மேஷ ராசிக்கும், கேது துலாம் ராசிக்கும் பெயர்ச்சியாகின்றனர்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 21.03.2022, பங்குனி 7ம் தேதி திங்கள் கிழமை மதியம் 3.02 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர்.

அதிர்ஷ்ட பலனைப் பெற இருக்கும் ராசிகள் யார்?

மிதுனம் ராசிக்கு

ராசிக்கு 11ம் இடத்தில் ராகுவும், 5ம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். இந்த காலத்தில் ராகு உங்களுக்கு சாதகமான சூழலில் சஞ்சாரம் செய்வதால் நிதி நிலை சாதகமாக அமையும். மேலும் குரு 5ம் பார்வையாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.

உங்களுக்கு வருமானம் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். பொருளாதாரம் உயரும் என்பதால் கடன் பிரச்னை தீரும்.

கடகம் ராசிக்கு

கடக ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் அதிர்ஷ்ட பலன் தருவதாக அமையும். இந்த காலத்தில் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிப்பதோடு, நிதி நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். குடும்பம், பணியிடத்தில் உங்களுக்கு சிக்கல் தீர்ந்து மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம் ராசிக்கு

விருச்சிகத்திலிருந்து கேது மாறுவது சிறப்பானது. உங்களின் திறமை பளிச்சிடும். தொழில், வியாபாரத்திற்கு ஏற்ற சாதகமான சூழல் நிழவும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். பதவி உயர்வும், சம்பள உயர்வும் சிறப்பாக கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கும்பம் ராசிக்கு

கும்ப ராசிக்கு ராகு – கேது கிரக சஞ்சாரம் சாதகமான இடத்தில் சஞ்சாரம் செய்வது விசேஷம். உங்களின் ஆற்றல், செயல்திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் அங்கிகாரம் கிடைக்கும். திறமை பளிச்சிடும். வேலை சார்ந்த பயணங்கள் நல்ல லாபம் தருவதாக இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.12.2021 Today Rasi Palan 09-12-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article2022 இல் ராகு கேது பெயர்ச்சியால் திடீர் பேரதிர்ஷ்டம் மூலம் சந்தோசத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!