2022ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களில் யாருக்கெல்லாம் கேது அள்ளி கொடுப்பார் தெரியுமா? எந்த ராசிக்கு என்ன அதிஷ்ட பலன்கள் கிடைக்கும்!
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.
மேஷம் ராசிக்கு:
திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். நோய் நொடிகளால் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம்.
ரிஷபம் ராசிக்கு:
தொழில் வகை கூட்டாளிகளுடன் இணக்கம் உண்டாகும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். போட்டி பொறாமை ஒழியும்.
மிதுனம் ராசிக்கு:
ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார்.
கடகம் ராசிக்கு:
கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். குழந்தைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். கால்களில் வலி உண்டாகும். தாயுடன் கருத்துவேறுபாடு உண்டாகும்.
சிம்மம் ராசிக்கு:
கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். தெய்வ நம்பிக்கை குறையும்.
கன்னி ராசிக்கு:
இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். தம்பி,தங்கைகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கு:
ராசியில் கேது வந்து அமர்கிறார். ஏழாம் வீட்டில் ராகு பயணம் செய்கிறார். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம்.
விருச்சிகம் ராசிக்கு:
இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.
தனுசு ராசிக்கு:
இந்த ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
மகரம் ராசிக்கு:
உங்கள் விருப்பங்கள் இனி தடையின்றி நிறவேறும்.வீட்டுக்கு பழுது நீக்கி செப்பனிடும் செலவுகள் உண்டு. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் விலகும்.
கும்பம் ராசிக்கு:
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில், உத்யோகத்தில் தடைகள் நீங்கும். மாமியாருடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெய்வ காரியங்கள் தடைப்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும்.
மீனம் ராசிக்கு:
குடும்ப ராகு, எட்டாம் இட கேதுவால் திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். மனோ தைரியும் உண்டாகும். பயணத்தடைகள் நீங்கும். தடைப்பட்ட தெய்வ காரியங்கள் நிறைவேறும். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.