2020 இல் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி! யாருக்கு திடீர் விபரீத ராஜயோகம் தெரியுமா?

0

2019 ஆம் ஆண்டின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு வரப்போகும் 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?

சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகின்றது. எனவே சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். இது பற்றி முழு விபரங்களையும் அறிந்து கொள்ள தொடர்ந்தும் படியுங்கள்.

இங்கு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் 2020 ஆம் ஆண்டு எவ்வாறு இருக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு வேலை மிகவும் புனிதமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் நிச்சயம் வேலை அல்லது வணிகத்தில் வெற்றி காண்பார்கள். இந்த வருடம், பணம் சம்பாதிப்பதற்கு பல நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

இந்த வருடம் வீட்டில் ஒரு நல்ல நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வீர்கள். ஆண்டின் மையப்பகுதியில் உங்கள் தம்பி அல்லது தங்கையின் திருமணத்திற்கான வாய்ப்பு உள்ளது. இந்த வருடம், உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் கடந்த வருடம் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டீர்கள்.

ஆனால் இந்த வருடம் அதிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படும் மற்றும் அனைத்து கவலைகளும் மறைந்துவிடும்.

கடந்த வருடம் முழுமையடையாத பணிகள் இந்த வருடம் நிறைவடையும் என எதிர்பார்க்கலாம். இந்த வருடம் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தின் கதவுகள் திறக்கப்படும். அதேப் போல் பண வரவையும் எதிர்பார்க்கலாம். இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு சந்தோஷமும், சவாலும் நிறைந்ததாக இருக்கும். மகிழ்ச்சியைப் பெறும் அதே சமயம் சவால்களையும் எதிர்கொள்வீர்கள்.

வேலை மற்றும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். வர்த்தகர்களின் தற்போதைய பணிகள் சிறு தடைகள் காரணமாக பாழாகக்கூடும். ஆண்டின் மையப்பகுதி வரை வேலை செய்பவர்கள் எந்த ஒரு சிறப்பான வெற்றியையும் பெறமாட்டார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான நிதி நிலைமை மிகவும் புனிதமானதாக இருக்கும். ஆனால் படிப்படியாக சிரமங்கள் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இருப்பினும் உங்கள் உடன்பிறப்புகளிடம் இருந்து முழு ஆதரவும் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த வருடம் ஒரு புதிய உறவை நீங்கள் ஆரம்பிக்கலாம். காதல் மற்றும் ரொமான்ஸ் உங்கள் கதவைத் தட்டும் மற்றும் உங்கள் தேடல் இறுதியாக முடிவடையும்.

பணி இடத்தில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கக்கூடும். உங்களின் பணித் திறன் அதிகரிக்கும். வர்த்தகர்கள் லாபம் பெறுவதற்கு பல அற்புதமான வாய்ப்புக்களை பெறுவார்கள்.

மேலும் உங்கள் வணிகள் வலுவாக உயரும். இந்த வருடம் வீட்டில் சில நிதி நெருக்கடிகள் இருக்கலாம். இது உங்கள் குடும்பத்தில் இருந்து உங்கள் பிரிந்து செல்ல வழிவகுக்கும். கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்காது. இந்த ராசிக்காரர்கள் பித்தம் தொடர்பான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முன்னேறுவதற்கு பல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் இவர்களுக்கு சாதகமாக விஷயங்கள் நடைபெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

உங்களின் போராட்டத்திற்கும், கடுமையான உழைப்பிற்கும் நிச்சயம் நல்ல முடிவுகள் கிடைக்கும். நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், பணியிடத்தில் உயர் பதவி கிட்டும்.

இந்த வருடம் வர்த்தகர்களுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்க நினைத்தாலோ அல்லது புதிய வியாபாரத்தை தொடங்க நினைத்தாலோ முயற்சிக்கலாம். இந்த வருடம் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரம்பத்தில் கல்வியில் சில தடைகள் இருக்கும். ஆனால் படிப்படியாக நிலைமை மாறி மேம்படும். இந்த வருடம் பல நிதி சவால்கள் இருக்கலாம். ஆனாலும் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினால், நீண்ட காலமாக அதற்கு முயற்சித்து வந்தால், இந்த வருடம் அது நிறைவேறும்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வருடம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த வருடத்தில் நீங்கள் உயர் பதவி அல்லது விரும்பிய இடமாற்றம் பெற வாய்ப்புள்ளது. வர்த்தகர்களுக்கு, இந்த வருடத்தில் ஏற்றதாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

ஆனால் வருடத்தின் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். நல்ல நிதி நிலைமையுடன், புதிய வீடு அல்லது புதிய வாகனம் குறித்த கனவு நிறைவேறும். குடும்பத்தில் ஏதேனும் பெரிய பிரச்சனை இருந்தால், அதை நீங்கள் அகற்றிவிடுவீர்கள். இந்த வருடம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதிக வேலை அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வாழ்க்கை வித்தியாசமாகவும், புதியதாகவும் இருக்கும். தொழில் அடிப்படையில் நல்ல முடிவைப் பெறுவீர்கள்.

உங்களது கடின உழைப்பு அனைத்திற்கும் இந்த வருடம் நிச்சயம் வெகுமதி கிடைக்கும் என உங்களது கிரகநிலைகள் வெளிப்படுத்துகின்றன. உங்களின் சிறந்த செயல்திறன் காரணமாக, பணியிடத்தில் நல்ல பெயர் கிட்டும். இந்த வருடம் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

நீங்கள் தொழிலதிபராக இருந்தால், ஒரு பெரிய தொழிலை இந்த வருடம் ஆரம்பிக்கலாம். ஆனால் சரியான ஆலோசனைக்கு பின்னரே ஒருபடி மேலே செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிதி நிலைமை இந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இந்த வருடம் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பல சந்தர்பங்களில் நல்ல முடிவைத் தரக்கூடியதாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் பல பெரிய முன்னேற்றங்களைப் பெறலாம். அதுமட்டுமின்றி இந்த காலக்கட்டத்தில் எந்தவொரு புதிய வேலையையும் தொடங்கலாம்.

நிதி நிலைமை இந்த வருடம் நன்றாக இருக்கும் மற்றும் இந்த வருடம் நிறைய பணம் சம்பாதிக்கவும் முடியும். மாணவர்கள் வருடத்தின் நடுப்பகுதியில் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல நினைத்தால், அந்த விருப்பம் நிறைவேறலாம். இந்த வருடம் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு, 2020 ஆம் ஆண்டு குடும்பம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த வருடம் உறவுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

உங்களது பெரிய திட்டம் இந்த வருடத்தில் முடிக்கப்படாமல் போகலாம். வேலையைப் பற்றி சொல்வதானால், இந்த வருடம் வர்த்தகர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும், உடக்டள கூட்டாளரை அதிகமாக நம்பாமல் இருப்பது நல்லது.

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு இந்த வருடத்தின் இறுதிக்குள் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இந்த புத்தாண்டில் புதிய உறுப்பினரை உங்கள் வீட்டில் எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வருடத்தில் சற்று கலப்பு இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு சற்று கடினமாக இருக்கும். உங்கள் மீதுள்ள நம்பிக்கையைக் கைவிடாதீர்கள். இந்த வருடம், நீங்கள் சிந்தித்து முடிவுகளை எடுத்தால், உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வரும்.

இந்த வருடம் ஒரு நல்ல நிறுவனத்தில் நிரந்தர வேலைக்கான நீண்ட கால போராட்டம் முடிவிற்கு வரும் என்பதால், வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் வேலையை விடாமுயற்சியுடன் செய்யுங்கள். வர்த்தகர்கள், இந்த வருடம் ரிஸ்க் எடுப்பதைத் திவிர்க்க வேண்டும்.

நிதி விஷயங்களில் சில சிக்கல்களை சந்திக்கலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருப்பதால், அதுவே நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே இந்த வருடம் மகர ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் ஆண்டு பல சவால்களைக் கொண்டு வரும். எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நீங்கள் அதை முழு தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும்.

தொழில் குறித்து எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் வேலையை மாற்ற அல்லது இடமாற்றம் பெற மிகவும் கவனமாக முடிவெடுங்கள்.

வர்த்தகர்கள் ஒரு புதிய தொழிலை தொடங்க நினைத்தால், நல்ல அனுபவமிக்கவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்களுடன் சேர்ந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் இந்த வருடம் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதியைப் பொறுத்தவரை, இந்த வருடம் வருமானம் வழக்கமாகத் தான் இருக்கும். மேலும் ஒரு புதிய வருமானம் பெறுவதற்கான ஆதாரத்தைப் பெறக்கூடும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு 2020 ஆம் வருடம் அதிர்ஷ்ம் அளிக்கும். இந்த வருடம் எதிலும் நல்ல முடிவு கிடைத்து, உங்கள் மனம் சந்தோஷமாக இருக்கும். பணியிடத்தில் பெரிய சாதனைகளைப் புரிந்து, உங்கள் மரியாதை மற்றவர்களிடையே உயரும்.

வர்த்தகர்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் கொட்டும். ஆனால் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

இந்த வருடம் பணம் தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றிகரமாக இருக்கும். மொத்தத்தில் இந்த வருடம் நிதி நிலைமை வலுவாக இருக்கும். இந்த வருடம் பல ஆதாரங்களில் இருந்து நிதி சலுகைகளைப் பெறுவீர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வருடத்தின் ஆரம்பத்தில் நன்றாக இருப்பீர்கள். ஆனால் போக போக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 22.11.2019 வெள்ளிக்கிழமை!
Next articleஇந்த 6 ராசிக்காரர்களும் புகழுக்காகவே பிறந்தவர்கள் உங்க ராசியும் இதுல இருக்கா !