2020ல் இந்த மூன்று ராசியையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கும் ஏழரை சனி! தனுசு ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்?

0

சனி பெயர்ச்சி என்பது நமக்கான கஷ்ட காலமாக கருதுவது தவறு. சனி பகவான் நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளை சரி செய்யவும், நம்மை வழிபடுத்தவும் வருகின்றார்.

நவகிரகங்களின் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சிக்கு அதிகம் பயப்படுகின்றார்கள். ஏனெனில் சனி ஒரு ராசிக்கு 2 1/2 ஆண்டு காலம் சஞ்சரிக்கின்றார்.

இந்த கால காட்டத்தில் நமக்கு அதிக படிப்பினையை சனி பகவான் கொடுத்துச் செல்கிறார். அதிலும் ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும்.

நம் தலை முதல் பாதம் வரை பதம் பார்த்துவிட்டு செல்வார். இதுகுறித்து விருச்சிக ராசியினரிடம் கேட்டால் தெரியும். கடந்த 7 1/2 ஆண்டுகள் அவர்கள் பட்ட கஷ்டன்களை பட்டியலிடுவார்கள்.

​சனிப்பெயர்ச்சி எப்போது?
சாதாரண பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் சனிப் பெயர்ச்சி 2020ல் நடக்க இருப்பதாக இரு திகதிகள் குறிப்பிடுகின்றனர்.
அதில் 2020 சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் திகதி அதாவது ஜனவரி 24ஆம் திகதி நடக்க உள்ளது.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2020 டிசம்பர் 26ஆம் திகதி சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

​யாருக்கு பாதிப்பு?
சனி பகவான் மகர ராசிக்கு செல்வதால் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகின்றது.

சனி பகவானின் பார்வை 3, 7, 10ஆம் இடங்களில் விழுகிறது.

சனி பகவான் 3ஆம் பார்வையாக மீன ராசியையும், 7ஆம் பார்வையாக கடக ராசியையும், 10ஆம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையால் பார்க்க உள்ளார்.

இதன் மூலம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்கு மிகச்சிறந்த படிப்பினை கொடுக்க உள்ளார்.

தனுசு ராசிக்கு பாத சனி ஆரம்பம்

தனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி மூலம் ஜென்ம சனி விலகி பத சனியாகிறது. இதனால் தனாதிபதி ஸ்தானததில் அமரப் போகின்றார்.

தடைகள், சோதனைகள் அனுபவைத்த தனுசு ராசியினர் பெருமூச்சு விடும் காலம். பொருளாதார சிக்கல் தீர்ந்து பண வரவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்.

பாத சனியாக வருவதால் பயணங்களில் கவனம் தேவை, கால்களில் அடிபட வாய்ப்புள்ளதால், பாதுகாப்பான பயணங்கள் அவசியம்.

தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி அமர உள்ளார். இதனால் இருளிலிருந்த உங்களின் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கம்போல் வெளிச்சம் தென்படும். வெளிநாடு வேலை முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும்.
இருப்பினும் உங்களின் உடல் நாலனில் மிகுந்த அக்கறை தேவைப்படும். வண்டி, வாகங்களைப் பயன்படுத்துவோர் மிக கவனமாக இருப்பது அவசியம். உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் சனியின் பார்வை விழுவதால் உங்களுக்கு பொருளாதார வளர்ச்சி இருக்கும். இருப்பினும் பொறுமை மிக முக்கியம். கஷ்டங்கள் நீங்கி நன்மை வந்து சேரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டியில் சுவிற்சர்லாந்தும் டென்மார்க் அணிகள் தகுதி!
Next articleகன்னி ராசிக்காரர்களே! 2020 புத்தாண்டில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் அதிர்ஷ்டம்!