14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகளா! என்ன இப்போ இப்படி இருக்காங்க.
தென்னிந்திய சினிமா திரை உலகில் பிரபலமான 80களின் முன்னணி நடிகையான ராதாவின் மகள் தான் நடிகை துளசி நாயர். அதோடு ‘கோ’ படத்தில் கதாநாயகியாக நடித்த அதோடு சகோதரியும் ஆவார். மேலும்,துளசி நாயர் சினிமா துறைக்கு 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதுமட்டும் இல்லாமல் நடிகை துளசி நாயர் அந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசவும் பட்டார். மேலும்,அவருக்கு இந்த படத்திற்காக அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது. அதனை தொடர்ந்து துளசி நாயர் அவர்கள் 2014 ஆம் ஆண்டு ரவி கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ படத்தில் நடித்துள்ளார். மேலும்,இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.
அதோடு துளசி நாயர் தன்னுடைய 14 வயதில் சினிமா துறைக்கு நடிக்க வந்தார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து போனார்கள். மேலும்,உண்மையாகவே நடிகை துளசி நாயர் 14 வயதில் ‘கடல்’ படத்தில் நடித்தாரா!! என்று அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் அவருடைய நடிப்பும், அழகும் இருந்தது. இப்படி துளசி நாயர் அவர்கள் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்த உடனே அடுத்து அடுத்து இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வந்து வேற லெவல்ல பட்டையை கிளப்புவார் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள்.
ஆனால், அவர் சினிமா துறையில் நடிப்பதால் தன்னுடைய படிப்பை பாதியிலேயே நின்றது. அதனால், துளசி நாயர் நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பை தொடரலாம் என்று யோசித்தார். நடிகை துளசி நாயர் நடித்த இரண்டு படமும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. மேலும்,துளசி நாயருக்கு ஒரு பக்கம் சினிமாத் துறையில் வாய்ப்புகள் குறைந்ததாக இருந்தாலும் மறுபக்கம் படிப்பை தொடர முடியவில்லை என்ற காரணத்தினால் மும்பைக்கு படிக்கச் சென்று விட்டார்.
இதையும் பாருங்க : கமலை மட்டும் பேட்டி எடுக்கவே மாட்டேன், அவரது பிறந்தநாளன்று இப்படி சொல்லிட்டாரே டிடி. பின்னர் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக தற்போது “Podar International School”-ல் கடைசி வருட படிப்பை படித்து கொண்டு வருகின்றார். மேலும்,துளசி நாயர் அவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் தற்போது தன்னுடைய நண்பர்கள் மற்றும் தாயாரான ராதாவிடம் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துளசி நாயரா!!! என்ற ஆச்சிரயத்தில் அதிர்ந்து போய் உள்ளார்கள். இந்நிலையில் துளசி நாயர் அவர்கள் கொஞ்சம் எடை போட்டு உள்ளார்.
அதோடு நடிகை துளசி நாயர் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகி உள்ளார். மேலும், இவர் படிப்பை முடித்துவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்தால் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும். இதுமட்டுமில்லாமல் ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த இவருடைய அக்கா கார்த்திகா நாயருக்கும் சினிமாத்துறையில் மென்மேலும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் படத்தில் இருந்து சற்று விலகி இருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகை அனுராதா சினிமா துறையில் கொடிகட்டிப் பறந்தாலும் இவருடைய இரண்டு மகள்களுக்கும் சினிமா துறையில் வாய்ப்புகள் பின்தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.