11 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வெறிச்செயல்- கொதித்தெழுந்த பிரபல நடிகர் – முழு விபரம் இதோ!

0
418

சென்னையில் உள்ள அயனாவரம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அந்த சிறுமி 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.

செவித்திறன் பாதிக்கப்பட்ட அக்குழந்தை தினமும் பள்ளி செல்லும் போது அங்குள்ள காவலாளிகள் அவளிடம் பேசி பழகியிருக்கிறார்கள். இந்நிலையில் அந்த சிறுமியை லிஃப்டில் வைத்து 3 பேர் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

இப்படியே அங்கு வரும் பிளம்பர், லிஃப்ட் ஊழியர், வாட்ச் மேன்கள், வீட்டு வேலைக்காரர் என 6 பேர் அந்த குழந்தை கத்தியை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்கள்.

கடந்த 6 மாத காலமாக இந்த குற்றம் அரங்கேறியுள்ளது. அண்மையில் வெளி மாநிலத்தில் படித்து வரும் அந்த சிறுமியின் சகோதரி சென்னை வந்த போது தனக்கு நடந்ததை சிறுமி அவரிடம் சொல்ல, பெற்றோர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட 6 பேரையும், குற்றத்தை மறைத்தற்காக 12 பேரையும் 15 நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதில் அவர் சென்னையில் அந்த சிறுமிக்கு நடந்தது கொடூரமானது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாததாக உணர்கிறேன்.

12 வயதுள்ள அந்த குழந்தைக்கு நடந்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இப்படியான சீக்கு பிடித்த ஆண்கள் நம்மை சுற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: