தினமும் சுவாமிக்கு விள‌க்கு ஏற்ற மறக்காதீர்கள். விளக்கு வழிபாடு செய்யும் முறை! சுவாமி விள‌க்கை அணைப்பது எப்படி!

0

பெண்கள் தினமும் காலையில் எழுந்து வீட்டில் விள‌க்கேற்றி இறைவனை வழிபட்டு விட்டு அன்றாட வேலைகளை செய்ய ஆரம்பிக்கும்போது மனதுக்கு உற்சாகம் பிறக்கிறது சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. “விளக்கு வழிபாடு” என்பது எமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வி ளக்கு வழிபாட்டை மேற்கொள்வதால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக எல்லா சமயத்தவர்களாலும் நம்பப்படுகிறது.

புராண இதிகாச காலங்களில் மகரிஷிகள் யாகங்கள் மற்றும் ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இந்த வழிபாட்டு முறையே இப்போது எளிமையாக்கப்பட்டு சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக சிறிய வழிபாட்டு முறையாக விளக்கு வழிபாடானது விழங்குகிறது. இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால் திருவிளக்கு பூஜை எனச் செய்யப்படுகின்றது. விளக்கு வழிபாட்டால் மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது.

விளக்கேற்றி இறைவழிபாடு செய்வதால் சுற்றுப்புற இருள் போக்கபடுவதோடு எமது மனதின் இருளும் அகற்றப்படுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும் மற்றும் வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக ஐதீகம். இதனால் தான் இந்துக்கள் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம் எனும் நம்பிக்கையுடன் விளக்கு வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

விளக்கேற்றும் போது விளக்கில் பஞ்சு திரியிட்டு பசு நெய் கொண்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாகவும் அதை ஏற்றும் போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.

உங்கள் வீட்டில் விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடித்தால் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதோடும் தீய சக்திகள், செய்வினைகள் மற்றும் திருஷ்டிகள் எதுவும் நம்மை அணுகாது.வெள்ளிக்கிழமைகளில் வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு அதன் நடுவில் திருவிளக்கை ஏற்றிவைத்து வீட்டு பூஜையறைக்குள் அந்த விளக்கைக் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்குள் வருவதாக நம்பிக்கை. வீடுகளில் காலை மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கேற்றி வந்தால் எல்லா மங்களங்களும் கிடைத்து வாழ்க்கை ஒளிமயமாக்கும்.

பொதுவாக விளக்கை ஏற்றியதிலிருந்து அதனை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் அணையும் வரை விட்டு விடக் கூடாது. தீபம் தானாக அணைவது கெடுதலைக் கொடுக்கும்.

விளக்கை குளிர்விக்கும் போது கைகளால் வீசியோ அல்லது வாயால் ஊதியோ அணைக்கக்கூடாது. விளக்கு மட்டுமல்ல கற்பூரம் மற்றும் மெழுகுவர்த்தி என்று எதையும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக்கூடாது. சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக்கூடாது. தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். ஆகவே தினமும் வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்து இறைவனுடைய அருளை பெறுங்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிசம் அருந்தியவர்களின் விசத்தை போக்கி உயிர் பிழைக்க வைக்கும் கடுகு என்பது உங்களுக்கு தெரியுமா? கடுகு பற்றிய இன்னும் பல மருத்துவ‌ தகவல்கள்!
Next articleஉங்கள் கைகளில் தொங்கும் கொழுப்பு சதையை குறைக்க வீட்டிலேயே இருக்கிறது வைத்தியம்!