வறண்ட முகம் பளபளக்க 15 நிமிடங்கள் பூசுங்கள்!

0
553

உங்கள் வறண்ட சருமம் பளபளப்பாக இருக்க இதோ ஒரு இயற்கை டிப்ஸ்..!

சிலருக்கு இயற்கையாகவே வறண்ட சருமம் இருக்கும். குறிப்பாக வெயில் காலத்தில், வறண்ட சருமம் நீர்ச்சத்து குறைந்து அலங்கோலமாக காட்சியளிக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு கேரட் பேஷியல் ஒரு சிறந்த தீர்வு.

இரண்டு கேரட்டை மிக்சியில் போட்டு சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டீஸ்பூன் சுத்தமான மலைத்தேன் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் முகத்தில் பூசி காய வைக்க வேண்டும். பின்னர் முகத்தை கழுவி விட வேண்டும்.

இந்த கேரட் பேஷியலை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் வறட்சித் தன்மை மறைந்து, தோல் பளபளப்பாகும். மேலும் கோடை காலத்தில் அதிக அளவு ஊருடுவும் புற ஊதாக் கதிர்களை தாங்கும் சத்துக்களும்,முகத்துக்கு கிடைக்கும். நேரம் கிடைக்கும் போது கேரட் ஜூஸ் குடிப்பதும் உடல் நலத்திற்கும் நல்லது.

Previous articleகருமையான முடியைப் பெற வீட்டிலேயே பக்கவிளைவு இல்லாத ஹெர்பல் ஹேர் டை எப்படி தயார் செய்வது தெரியுமா!
Next articleஉங்களுக்கு ஆஸ்மா இருக்கா அப்ப நீங்க செய்ய வேண்டியது இது தான்!