வயிற்றுப் புண் (அல்சரை) முழுமையாக குணப்படுத்த இயற்கை வழிகள்.

0

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் பரவி, குடலின் சுவர்களை அரிக்கத் தொடங்கும். தினமும் இது தொடர்கதை ஆனால் பின்னர் அமிலம் அரித்து புண்ணாகி அதுவே வயிற்றுப் புண் எனப்படும் அல்சர்.

அது தவிர்த்து வேறு காரணங்களாலும் வயிற்றுப் புண் உண்டாகும். வயிற்றில் ஹைஸ்பைலோரி என்ற பாக்டீரியாக்களால் உருவானால் அல்சர் ஏற்படும் வாய்ப்புண்டு. மேலும் தாங்க முடியாத மன அழுத்தம், அதிக கோபம், உணர்ச்சி வசபடுதல் போன்றவற்றாலும் அல்சர் உண்டாகிறது.

அதனை மருத்துவத்தால் வெறும் 1 சத்வீதம்தான் குறைக்க முடியும். உணவால் மட்டுமே அல்சரை முழுமையாக குணப்படுத்த முடிடயும். சரி என்ன செய்தால் வயிற்றுப் புண் குணமாகும் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் இதானி தொடர்ந்து படியுங்கள்.

அறிகுறி :
இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே, வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குமட்டலும் வாந்தியும் வரும்.

யாருக்கெல்லாம் அல்சர் தாக்கும் வாய்ப்புள்ளது ?
புகை பிடிப்பவர்களுக்கு, புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, வாயுக் கோளாறினால் அவதிபப்படுபவர்களுக்கு, அதிக ஸ்ட்ரெஸினால் இருப்பவர்களுக்கு, காலை உணவை தவறு விடுபவர்களுக்கு, எப்போதும் சுயிங்கம் மெல்பவர்களுக்கு, என இவர்களுக்கெல்லாம் அல்சர் தாக்கும் ஆபத்து உள்ளது.

பெஸ்ட் சூப் :
இதே அகத்திக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம்,மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக்குடிக்கலாம்.

தினமும் இதை செய்ங்க:
துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் அகத்திக் கீரையை சேர்த்து வேக வைத்து கடைந்துகொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.

அருகம்புல் :
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவதால் அல்சர் மட்டுமல்ல பலப் பிரச்சனைகள் சரியாகும். வியாதிகள் வராமலும் தடுக்கும். இதனை குடித்து 1 மணி நேரத்திற்கு பின் உணவை சாப்பிடுங்கள்.

பூசணிக்காய் :
பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டுஅரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்துஅப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.

மாதுளம்பழ ஜூஸ் :
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்துசாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ் :
நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆறும். அது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை பெற்றது.

மூலிகைப் பொடி :
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்குதினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவைதேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

மூலிகை மோர் :
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதிலிருந்து தினமும் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும்

மணத்தக்காளி :
மணத்தக்காளியும் வயிற்றுப் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. மணத்தக்காளி கீரையை வாரம் 3 நாட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை கிடைக்கவில்லையென்றால் மணத்தக்காளி வற்றலை கடைகளில் வாங்கி அடஹ்னை வற்றல் குழம்பாகவும், பொரித்தும் தினமும் சாப்பிடுங்கள்.

தேங்காய்ப் பால் :
தேங்காய்பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படுவதுடன், புண்களும் விரைவில் ஆறும். தேங்காயையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப் பழம் :
பச்சை வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பாதிப்படைந்த மெல்லிய சவ்வுத்தோல்களை மீண்டும் விரைவில் வளரச் செய்யும், புண்களையும் ஆற்றிவிடும்.

வேப்பிலை கொழுந்து :
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை கொழுந்தை சிறிதளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறுவதுடன், வயிற்று பாதிப்புகளையும் நீக்கும்.

அரிசி கஞ்சி :
சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டு வாருங்கள். பி காம்ப்ளக்ஸ் சத்து முழுவதும் கிடைக்கும். இதனால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

கொத்துமல்லி :
இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

முட்டைக் கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

அல்சர் வந்தவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள் :
அல்சர் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் காபி, டிபன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலை உணவை சாப்பிட்ட பின் சிறிது நேரம் கழித்து குடிக்கலாம். கார உணவுகளை தவிருங்கள். எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் பயிறு வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.

சிட்ரஸ் பழங்கள் :
அல்சர் இருப்பவர்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை இன்னும் அதிகமான அமிலசுரப்பை தூண்டுவதால் வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.

பால்
அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் பாலை குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பாலில் இருக்கும் புரத சத்தும் கொழுப்பு சத்தும் வயிற்று புண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பால், வயிற்றின் அமில தன்மையை அதிகரிக்க செய்யும்.

சிவப்பு இறைச்சி!!
இந்த சிவப்பு இறைச்சி, வயிற்று ஓரங்களை பழுதடைய செய்யும். இதில் உள்ள அதிக அளவிலான புரத சத்தும், கொழுப்பு சத்தும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால், வயிற்றிலேயே அதிக நேரம் இறைச்சி உணவு தங்கிவிடும். இதனாலும், வயிற்றில் அமிலம் அதிகம் சுரக்க நேரிடும். இதுவும் அல்சரை அதிகரிக்க செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநுரையீரல், சளி சம்பந்தமான பிரச்சினையில் இருந்து விரைவில் விடுபட உப்பு சிகிசிச்சை.
Next article30 நாட்களில் தலைமுடி நீளமாக வளர நரைமுடி நீங்கி முடி கருப்பாக மாற எண்ணெய்!