மூல நோயை குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!

0

மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது என்று சொல்லப்படுகின்றது.

மலக்குடல் அல்லது ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே நரம்புகள் வீக்கம் அடைவதால் இந்த பிரச்சனை தோன்றுகிறது

மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும். இதனால் பலரும் அவதிப்படுவதுண்டு.

இந்த மூல நோயை குணப்படுத்தும் சில பாட்டி வைத்திய முறைகளை இங்கே பார்ப்போம்.

தினமும் இரண்டு வேளை முள்ளங்கி சாறு பருகுவது என்பது மூல நோய்க்கான பொதுவான சிகிச்சை ,முறையாகும். 1/4 கப்பில் தொடங்கி மெதுவாக 1/2 கப் வரை பருகலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனைப் பருக வேண்டும்.

மூன்று அல்லது நான்கு அத்திப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இரவில் அதனை சிறிதளவு நீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் இந்த நீருடன் சேர்த்து ஊற வைத்த அத்திப்பழத்தையும் இரண்டு முறை உட்கொள்ளுங்கள்.

மாதுளம் பழத்தின் தோலை எடுத்து, நீரில் கொதிக்க வைத்து . இந்த நீரை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கும். இது வெறுமனே மூலத்தை மட்டுமல்லாது வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும். மலச்சிக்கலைப் போக்கும்.

மாதவிலக்கின் போது உண்டாகும் வலியையும் தீர்க்கும்.

மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க, மோரில் கல் உப்பு சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, மிளகு தூள் சேர்த்து இரண்டு முறை பருகி வாருங்கள்.

மூல நோயால் ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க, அரை கப் ஆட்டுப் பாலுடன், ஒரு ஸ்பூன் தூள் செய்த கடுகை சேர்த்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து பருகவும். காலையில் வெறும் வயிற்றில் இதனைப பருகுவதால் இரத்தப்போக்கில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

காய்ந்த மாங்காய் கொட்டைகளை எடுத்து தூளாக்கிக் கொள்ளவும். இந்த பவுடர் இரண்டு ஸ்பூன் எடுத்து சிறிதளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வரவும்.

ஒரு ஸ்பூன் இஞ்சி, மற்றும் எலுமிச்சை சாற்றுடன், சிறிதளவு புதினா இல்லை மற்றும் தேன் சேர்த்து பருகவும். இதனை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம்.

மூல நோயால் உண்டாகும் வலியைக் குறைக்க ஒரு கனிந்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து அதில் ஒரு கப் பால் சேர்த்து பருகலாம். இதனை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை பின்பற்றலாம்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு நாவல் பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.

மூல நோய்க்கு நூல்கோல் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. கேரட், கீரை மற்றும் நூல்கோல் இலைகளைக் கொண்ட ஒரு சாற்றை தினமும் 50 மில்லி பருகுவதால் மூல நோய் கட்டுப்படுகிறது.

தினமும் காலையில் நீர் மோருடன் பாகற்காய் இலையின் சாற்றை சேர்த்து பருகுவதால் மூல நோய் குணமாகிறது. இதில் சிறிது மஞ்சளும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் ஒரு ஸ்பூன் மஞ்சள் அல்லது ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்துக் கொள்ளலாம்.

கருப்பு சீரகத்தை தூளாக்கி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து தினமும் ஒரு முறை பருகவும். குறிப்பாக காலையில் இந்த நீரை பருகவும்.

ஒரு முழு வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் அதனுடன் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிடவும்.

ஒரு கையளவு கருப்பு எள்ளை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இரண்டு பங்கு நீர் ஆவியாகும் வரை கொதிக்க வைத்து பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும். இந்த விழுதுடன், வெண்ணெய் சேர்த்து தினமும் ஒருமுறை சாப்பிடவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும் !
Next articleபெண்களை சீரழித்த மகனை காப்பாற்ற வாதாடும் தாய்! பொதுமக்களிடமிருந்து தப்பிய காட்சி!