மீன் சாப்பிடாதவங்க அதே சத்துக்களை பெறணுமா! இந்த 5 பொருள சாப்பிடுங்க!

0

அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழும் மீன் இனம் ‘மாங்க் பிஷ்’. கூஸ் பிஷ், ஆங்லர் பிஷ் என்றும் இது அழைக்கப்படுகிறது. அறிவியல் வகுப்புப்படி இது லோபியஷ் என்ற வகையை சேர்ந்தது. லோப்ஸ்டர் என்னும் ஒரு வகை இறால் மீனைப் போன்ற சுவை கொண்டிருப்பதால் இது ‘ஏழையின் லோப்ஸ்டர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மாங்க் பிஷ் பிரபலமானது. இது பிடிக்கப்படும் முறையானது சர்ச்சைக்குரியது. ஆகவே, அமெரிக்கா உள்பட வேறு நாடுகளில் இது அதிகம் அறியப்படவில்லை. மாங்க் பிஷ் கிடைக்காதநேரங்களில் அதை உண்ட திருப்தி வேண்டும் என்றால் எவற்றை சாப்பிடலாம் என்று ஒத்த மீன் இனங்களை பார்க்கலாம்.

அட்லாண்டிக் காட்
அட்லாண்டிக் காட் என்னும் மீன் வெண்மை நிறத்தில் இருக்கும். இது பிடித்தவுடன் புதிதாக மட்டுமின்றி பனிக்கட்டியில் பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. மாங்க் பிஷ் அளவுக்கு இது அடர்த்தி கொண்டதல்ல; ஆனால், அதே போன்ற ருசி கொண்டது. ஆகவே, ருசியில் மாங்க் பிஷ்க்கு சற்றும் சளைக்காத அட்லாண்டிக் காட் சாப்பிடலாம். ஆனால், பசிபிக் காட் என்ற மீன் வகையை முயற்சிக்க வேண்டாம்.

ஹாலிபுட்
ஹாலிபுட், மாங்க்பிஷ்ஷுக்கு அடுத்தபடியாக அதிகம் உண்ணப்படுகிற மீனாகும். இதுவும் வெண்மை நிறமாக இருக்கும். இதில் எண்ணெய் சத்து குறைவாக இருக்கும். ஆகவே, சமைக்கும்போது சிறிது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொண்டால், மாங்க் பிஷ் சமைத்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

லோப்ஸ்டர்
லோப்ஸ்டர் என்னும் சிங்கி இறால் விலை அதிகமானது. அதனுடன் ஒப்பிடும்போது மாங்க்பிஷ் மலிவானது. லோப்ஸ்டரில் நாம் சதையின் பெருமளவை ருசித்து சாப்பிட முடியும். ஆனால், மாங்க் பிஷ்ஷில் வால் பகுதி மட்டுமே உண்ணக்கூடியது.

ஸ்காலோப்ஸ்
கூடு கொண்ட மீன் வகை ஸ்காலோப்ஸ் ஆகும். இது ருசியில் மாங்க் பிஷ்ஷுக்கு ஒத்திருக்கும். கடல் வாழ் ஸ்காலோப்புகள் சிறந்தவை. வளைகுடா என்னும் பே பகுதி வாழ் ஸ்காலோப்பும் சாப்பிடலாம். ஆனால், கடல்வாழ் ஸ்காலோப்பே ஒப்புநோக்க சிறந்தது.

டோஃபு
மாங்க்பிஷ்ஷுக்கு மாற்றாக சைவ உணவை தேடினால், டோஃபு ஏற்றது. ருசி சற்று வேறாக இருந்தாலும், தோற்றம் மற்றும் உணவின் அடர்த்தி மாங்க்பிஷ்ஷை ஒத்திருக்கும். வேறு உணவுகளுடன் இணைத்து சாப்பிட ஏற்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகை நடுக்கம் இருந்தால் உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று உள்ளது என்று அர்த்தம்!
Next articleஇதுல தினம் ஒரு பூவ பாலில் போட்டு குடித்தால் விந்து பெருகும்! வீரியமும் அதிகரிக்குமாம்!