மார்ச் மாசம் பொறந்தவங்க எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான் ஏன் தெரியுமா!

0

2019 நேத்துதான் பொறந்த மாதிரி இருக்கு அதுக்குள் இரண்டு மாசம் முடிஞ்சிருச்சு. ஒவ்வொரு மாசத்துக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும். பொதுவாக மார்ச் மாதம் பொதுத்தேர்வுகள் தொடங்குற காலமா இருக்கும், அதேசமயம் கோடைகாலம் தொடங்குற காலமாகவும் இருக்கும். மார்ச் மாசம் பொறந்தவங்க எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷல்தான்.

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் ஆச்சரியங்களின் கலவை என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தனித்துவமான சில குணங்களையும், திறமைகளையும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் தனியாக தெரிவார்கள். எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு நன்றாக தெரியும். மார்ச் பிறந்தவர்களின் குணநலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறந்த உள்ளுணர்வு கொண்டவர்கள்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களை கவிழ்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று ஏனெனில் இவர்கள் சிறந்த உள்ளுணர்வு கொண்டவர்கள். அவர்களுக்கு எதிராக போடப்படும் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் இவர்கள். அவர்களை குறைத்து மதிப்பிடுவது ஆபத்தானது ஏனெனில் ஏமாற்றங்கள் இவர்களை வலிமையானவைகளாக மாற்றும்.

தாராள மனப்பான்மை
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தாராள குணமும், இரக்க சுபாவமும் கொண்டவர்கள். இந்த குணம் அவர்களுக்கு அவர்களின் நண்பர்களிடம் இருந்து பாராட்டை பெற்றுத்தரும். மற்றவர்கள் இவர்களை மதிப்பதற்கும், ரோல்மாடலாக எடுத்து கொள்வதற்கும் இவை காரணமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்ய இவர்கள் எப்போதும் தயாராய் இருப்பார்கள்.

அர்ப்பணிப்பாளர்கள்
இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் அனைவரிடமும் அர்ப்பணிப்புடன் பழகுவார்கள். நட்பு, காதல் குடும்ப உறவுகள் என அனைத்தின் மீதும் பற்றுடன் இருப்பார்கள். அவர்களை ஒருபோதும் கைவிட்டு விடமாட்டார்கள். ஒருவர் தன் நம்பிக்கைக்கு தகுதியானவர் அல்ல என்று உணர்ந்தால் அவர்களுடனான தொடர்பை தொடர மாட்டார்கள். ஆனால் யாரை நம்புவது என்பதில் இவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடும்.

அமைதியானவர்கள்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புபவர்களாக இருப்பார்கள். விவாதங்களில் ஈடுபடுவது, சண்டை போடுவது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் இருக்காது. ஆனால் இவர்களை போல சண்டை போடவும் முடியாது. அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

அப்பாவித்தனம்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் மிகப்பெரிய பலவீனமே அவர்களின் அப்பாவித்தனம்தான். இவர்களின் மனதை மற்றவர்கள் எளிதில் மாற்ற முடியும் இதனை பலரும் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். ஒருவர் மீது கண்மூடித்தனமாக வெறுப்பை உமிழ இவர்களால் மட்டுமே முடியும், அதற்கு இவர்களை சுற்றியிருப்பவர்களின் செயல்கள் முக்கிய காரணமாக இருக்கும். சொந்த புத்தி இவர்களுக்கு கொஞ்சம் குறைவுதான்.

சுயநலம்
இவர்கள் பெரும்பாலும் சுயநலமாக யோசிக்க மாட்டார்கள், இது அவர்களுக்கு பெரும் பலவீனமாகும். இரக்க குணம் இவர்களுக்கு அதிகம் இருந்தாலும் சிலசமயம் தங்களின் தேவைகளை மறந்து பிறருக்கு உதவுவது இவர்களின் பலவீனத்தால் ஒன்றாகும். இவர்களின் இரக்க குணத்திற்காகவே இவர்களை பலரும் உபயோகப்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது.

சலிப்பு
ஆர்வம் இல்லாத விஷயங்கள் இவர்களுக்கு எளிதில் சலிப்பை ஏற்படுத்தும். அதுவே இவர்களுக்கு ஆர்வமுள்ள செயலக இருந்தால் இவர்களின் செயல்பாடுகள் எதிர்மறையாக இருக்கும். எனவே தங்களின் குறிக்கோள் எது என்று தீர்மானிப்பதில் இவர்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

கூச்சம்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். பல சந்தர்ப்பங்களில் இவர்கள் கூச்ச சுபாவம் எதிரில் இருப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்க கூடியதாக இருக்கும். இப்போதிருக்கும் இந்த மோசமான உலகம் இதனையே அவர்களுக்கு எதிராக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களுக்கு அவரவர் ராசிப்படி இந்த விசயத்தில‌ பலவீனம் இருக்கும்! பலவீனம் என்ன தெரியுமா!
Next article83 வயதில் காதலியுடன் ரொமான்ஸ் பண்ணும் பெருசு! காதலிக்கு 55000 புது டிரஸ் பரிசா கொடுத்திருக்காரு!