பிணம் இருப்பது தெரியாமல் காரை திருடிச்சென்ற திருடன். பிறகு நடந்ததை பாருங்கள்!

0
809

மெக்ஸிகோவில் கொள்ளையன் ஒருவன் காரில் பிணம் இருப்பதை அறியாமல் அந்த வாகனத்தை திருடிச் சென்றி இறுதியில் போலீஸில் மாட்டிக் கொண்டான்.

மெக்சிகோ நாட்டில் லாகியூபாகியூ என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை வீட்டிக்கு எடுத்து செல்ல அவரது உறவினர்கள் ஒரு காரில் இறந்து போன நபரின் பிணத்தை ஏற்றியுள்ளனர். பின் அவர்கள் மருத்துவமனைக்குள் சென்று வெளியே வந்து பார்த்த போது கார் காணவில்லை.

திருடன் ஒருவன் வண்டியில் பிணம் இருப்பது தெரியாமல், அந்த காரை திருடிச் சென்றுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து போலீஸார் அந்த காரை மீட்டனர், அந்த காரை திருடிச் சென்ற திருடனையும் போலீஸார் கைது செய்தனர்.

Previous articleதிடுக்கிடும் தகவல்கள் அம்பலம் காதலனை மறக்க முடியாமல் தவித்ததால் குழந்தைகளை கொன்றேன்!
Next article87 வயது மனைவியை எரித்துக் கொன்ற 91 வயது முதியவர் என்ன காரணம்?