பல் சொத்தையா! கவலையை விடுங்க! இந்த ஆறு வழிகளை பின்பற்றுங்கள்!

0

நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனைக்கு முகம் கொடுத்து இருப்போம்.இவ்வாறு பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள். இனிப்புப் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதும், உணவு உட்கொண்ட பின்னர் தூய நீரில் வாயை கொப்பளிக்காமல் இருப்பதும் தான்.

இதோ இந்த வழிகளை பயன்படுத்தி பல் சொத்தையை போக்கலாம்! இந்த ஆறு வழிகளை பின்பற்றுங்கள்!

ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது என்னவென்றால், தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளித்தலாகும். இதனை தொடர்ச்சியாக செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் பேணப்படும். அத்துடன், சொத்தைப் பற்கள் உருவாவதைக் கூட‌ தடுக்கலாம்.

கிராம்பு
1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை கலந்து, தூய‌ காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்.

வேப்பிலை
வேப்பிலை சாற்றினை எடுத்து சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வருதல் சிறந்தது.

உப்பு தண்ணீர்
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்
மஞ்சளானது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பூண்டு
3-4 பற்கள் பூண்டை , அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இதனை தவறாமல் தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இலை துவையல் அரைச்சு சாப்பிட்டு பாருங்க‌ எவ்வளவு உடம்பு வலி இருந்தாலும் பஞ்சா பறந்துடும்!
Next articleவெங்காயத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்! எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும்!