அடிக்கடி சளி பிடிக்குதா! இந்த பொடியை தினமும் ஒரு சிட்டிகை சாப்பிடுங்க உடனே சரியாகிடும்!

0

நுரையீரல் பாதித்தாலே சளி, இருமல், காய்ச்சல் உட்பட பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே பல நோய்களிலிருந்து விடுபடலாம்.

அதேபோல் நம் உடலுக்கு சளியும் தேவை. ஏனெனில் அது உடலுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது.

சில பாக்டீரியா அல்லது வைரஸை சுவாசிக்கும்போது, அது நுரையீரலில் உள்ள சளியால் சிக்கிக்கொள்ளும்.

இதனால் நம் உடலுக்குள் செல்வதைத் தடுக்கிறது. இந்த சளியானது பின்னர் தும்மல், இருமல் அல்லது மூக்கு ஒழுகுதல் மூலம் வெளியேறுகிறது.

அதிகப்படியான சளியின் காரணமாகவே பல பிரச்சனைகள் நேர்கின்றன.

இதற்கான வைத்திய முறைகள் சில,

ஒரு ஸ்பூன் வெந்தயத்துடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுமார் 4 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இதனை தினமும் குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும்.

நன்கு இழுத்து மூச்சு விடுதல் பயிற்சி அல்லது உடற்பயிற்சி எதுவானாலும் நன்கு மூச்சை இழுத்து விடும்போது நுரையீரல் சளி கரைந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

கொதிக்கும் நீரில் அடிக்கடி ஆவி பிடித்தாலும் சளி கரைந்து வெளியேறும்.

தண்ணீரில் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள். வெதுவெதுப்பாக இருக்கும்போது வாயில் ஊற்றி கொப்பளிக்க சளி குறைந்து நுரையீரல் ஆரோக்கிய வாய்ப்பு உள்ளது.

உடலில் உண்டாகும் எல்லாவிதமான நோய்களுக்குமே வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும தான் காரணமாக இருக்கின்றன.

இந்த மூன்றில் எந்தவொன்று உடலில் அதிகரிக்கிறதோ அதைப் பொறுத்துதான் உடல் உபாதைகளும் உண்டாகின்றன.

அதிலும் குறிப்பாக, கப உடலாக இருப்பவர்களுக்கு அடிக்கடி சளி பிடித்தல், தலையில் நீர் கோர்ப்பது, சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகக் கூடும்.

அந்த கபத்தை உடலில் இயற்கையாகக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?…

ஏலக்காயைப் பொடி செய்து சிறிது வெண்ணெய்யுடன் கலந்து, காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் கபம் நீங்கும்.

கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், நெஞ்சில் சளி சேர்ந்து கபம் ஏற்படுவது குறையும்.

அமுக்கிரா கிழங்கைப் பொடி செய்து, தினமும் இரவில் பாலுடன் கலந்து சாப்பிட்டால் கபம் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகருப்பை சுத்தமாக வேண்டுமா? இதை 10 நாள் தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்!
Next articleகொழும்பில் பதற்ற நிலை! மஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்!