நிகவெரட்டியவில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள்! பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஆதங்கம்!

0

வடமேல் மாகாணம் முழுவதும் கடந்த 13ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவங்களால் முஸ்லிம்களின் பல உடமைகள் சேதமாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டது வேதனைக்குரிய விடயமாகும்.அத்தொடர் தாக்குதலில், நிகவெரட்டிய நகர முஸ்லிம்களின் பல வியாபார ஸ்தலங்கள் பலத்த சேதத்துக்குள்ளாகின. அத்தோடு ஒரு மஸ்ஜிதும் சில வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவங்களுக்குப்பின் ஊஊவுஏ கெமராக்களின் பதிவுகளை சாட்சியாகக் கொண்டு சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் நிகவெரட்டிய நகரத்தைச் சேர்ந்தவர்களென்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் என அப்குதி மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.இந்த கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நேற்று முந்தினம் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும் முயற்சியில் நகரத்தின் பிரதான பிக்குமார் இருவர் உட்பட நான்கு பிக்குமார் நேற்றைய தினம் நிகவெரட்டிய ஜும் ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினருடன் சமரசப் பேச்சு நடத்த சென்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் முன்பாகவும், பின்பு நீதிமன்றம் முன்பாகவும் குழுமி அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பொலிஸாரும் இராணுவத்தினரும் குழுமியிருந்தவர்களை விரட்டியுள்ளனர். நீதி மன்றத்தில் ஆஜராக்கிய 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நிகவெரட்டிய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.சம்பவத்தோடு தொடர்புபட்ட மேலும் பலரை கைது செய்யவுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

13ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பாக நிகவெரட்டிய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் 64 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஏனைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்க நம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குருணாகல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பிரமுகர்களும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அவர்களின் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களை சந்தித்து ஆறுதலளித்துள்ளனர்.ஆயினும், இதுவரை நிகவெரட்டிய நகரத்திற்கு எந்த அரசியல்வாதியும் வரவில்லையென்பது அப்பிரதேச மக்களின் ஆதங்கமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருநாவுக்கரசின் காம களியாட்ட கூத்துக்கள்! பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறியது என்ன!
Next articleசற்று முன்னர் கிடைத்த செய்தி! யாழ்.பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!