துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 3 வயது சிறுமி! கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை! இந்திய மக்களை உலுக்கிய சம்பவம்!

0

இந்தியாவில் தந்தை வாங்கிய 10,000 ரூபாய் கடனுக்காக அவரின் 3 வயது மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா.

இவருக்கு ட்விங்கிள் சர்மா (3) என்ற மகள் உள்ளார்.

கடந்த 31-ம் திகதி ட்விங்கிள் திடீரென காணாமல் போன நிலையில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பொலிஸ் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அலிகார் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்குத் தகவல் கொடுத்தனர்.


சம்பவ இடத்துக்கு வந்த துப்புறவு தொழிலாளர்கள் அங்கு சோதனை செய்த போது ட்விங்கிளின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதற்குள் ட்விங்கிளின் உறவினர்கள், சடலத்துடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

விசாரணையில், யாரோ ட்விங்கிளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் குழந்தை மயங்கியுள்ளது.

பின்னர், ட்விங்கிளின் ஒரு கையை வெட்டியதோடு, ஒரு கண்ணைத் தோண்டி எடுத்துள்ளனர்.

இறுதியாக, குழந்தையின் அடையாளம் தெரியாமல் இருக்க அவள் உடலில் ஆசிட் ஊற்றி கொடூரமாகக் கொலை செய்து குப்பையில் வீசியது தெரியவந்தது.

இது பற்றிப் பேசிய ட்விங்கிள் தாத்தா, எங்கள் பக்கத்து வீட்டில் உள்ள ஸாகித் என்பவரின் மீது தான் சந்தேகமாக உள்ளது. நாங்கள் அவரிடம் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தோம்.

இது தொடர்பாக அவர் எங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என கூறினார்.

இதன் அடிப்படையில், ஸாகித் மற்றும் அவருக்கு உதவி செய்த அஸ்லாம் என இருவரை கைது செய்த பொலிசார் அவர்களை விசாரித்தனர்.

அப்போது இருவரும் ட்விங்களை கொன்றதை ஒப்பு கொண்டனர்.

இதனிடையில் நாங்கள் புகார் அளித்த உடனேயே குழந்தையைத் தேடியிருந்தால், தற்போது என் மகள் இறந்திருக்க மாட்டாள். காவல் துறையினரின் அலட்சியம் இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் டுவிட்டரில் #JusticeForTwinkle என்ற டேக்கில் குழந்தையின் சாவுக்கு பலரும் நீதி கேட்டு வருகின்றனர்.

இதே விடயத்தை சில நடிகர், நடிகைகளும் வலியுறுத்தியுள்ளனர்.



உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதமிழீழ விடுதலைப் புலிகள் யாரையுமே தமிழ் மக்கள் காட்டிக் கொடுத்தார்களா!
Next articleதற்கொலை தாக்குதலில் இறந்த தீவிரவாதி சஹரான் உறவினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது!