சிறையில் நளினி- முருகன் சந்திப்பு!

0
399

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

அதன்படி, இருவரும் நேற்று காலை சந்தித்து பேசினர்.

பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதின்றம் உத்தரவையடுத்து, தமிழக அரசு அமைச்சரவை கூட்டி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள பரபரப்பான சூழலில் இதுதொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

காலை 8.5 மணி முதல் 9.5 மணி வரை சந்திப்பு நடந்தது. காட்பாடி டி.எஸ்.பி. அலெக்ஸ் தலைமையிலான பொலிசார் ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

சந்திப்புக்கு பின் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர் பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நளினி மற்றும் முருகன் உள்ளிட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் நளினி மற்றும் முருகன் நன்றி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி தங்களை விடுவிக்கக் கோரி தமிழக உள்துறை செயலருக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சென்றாயன்!
Next articleஅபிராமி பிரியாணி சுந்தரத்துடன் செய்த செயல்! கொந்தளிக்கும் சமூகவாசிகள்!