டி ராஜேந்திரனின் இளைய மகனும் சிம்புவின் சகோதரருமான குறளரசனின் திருமணம் கடந்த ஏப்ரில் 26ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பின்னர் அனைவரின் கேள்வியாக இருப்பது சிம்புவின் திருமணம் எப்போது என்பது தான். அதே போல சிம்பு யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிம்பு திருமணம் குறித்து பிரபல நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார். கூல் சுரேஷ் சிம்பு நடித்த பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நபரும் ஆவார்.
சமீபத்தில் விரைவில் வெளியாக உள்ள அந்த நிமிடம் என்ற படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கூல் சுரேஷ், சிம்புக்கு விரைவில் பேசிய பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக சிம்புவின் திருமணம் குறித்து பேசிய டி ஆர், கண்டிப்பாக சிம்பு நடிகையை திருமணம் செய்து கொள்ள மாட்டார். அவருக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார். மேலும், சிம்புவிற்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம் என்று கண்ணீர் மல்க பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.