சைனஸ் மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு!

0

சைனஸ் மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு!

சைனஸ் மூக்கடைப்பு : சைனஸ் தொந்தரவில் மூக்கடைப்பு, புருவத்தில் வலி, தலைவலி, தும்மல், தொண்டை வலி போன்ற பிரச்னை வரும். நாட்பட்ட நிலையில் காது பாதிப்பு ஏற்படலாம். சைனஸ் என்பது மூக்குக்கு அருகில் உள்ள இடைவெளியில் நீர்கோர்த்து விடுவதாகும். இதற்கு சித்தர் மூலிகை மருத்துவத்தில் மூக்கில் உள்ள நீரை சொட்டு மருந்துகள் மூலம் வெளியேற்ற திரும்பவும் நீர் கோர்க்காமல் செய்ய முடியும். இதனால் தொண்டை பாதிப்பு, காது பாதிப்பு வராமல் தடுக்கலாம்.

அலர்ஜி, ஆஸ்துமா :அலர்ஜி என்ற ஒவ்வாமை மாசுபட்ட உலகில் அனைவரையும் பாதிக்கிறது. அடுக்கு தும்மல், மூக்கில் நீராக வடிதல், கண்களில் அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது மூக்கை தாக்கும் அலர்ஜியாகும். இந்த அலர்ஜியே நாள்பட்ட நிலையில் வீசிங் என்ற நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு சித்தர் மூலிகை மருத்துவத்தில் வீசிங் வராமல் தடுத்து நிரந்தர தீர்வை அளிக்க முடியும்.

சிலருக்கு தும்மல் ஏதும் வராமல் நேரடியாக மூச்சிரைப்பு ஏற்படும். இது இரவு நேரத்தில் அதிகரித்து காணப்படும். வறட்டு இருமல், நடக்கும் போதும் ஓடும் போதும் மூச்சு வாங்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு பனிக்காலத்தில் மட்டும் தொந்தரவு ஏற்படலாம். எல்லா பிரச்னைகளுக்கும் சித்தர் மூலிகை மருத்துவத்தில் தீர்வு உள்ளது. மற்ற மருந்துகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு மூலிகை மருத்துவம் மேற்கொள்வதால் உடனடியாக மூச்சிரைப்பு குறைந்து படிப்படியாக ஆஸ்துமாவிலிருந்து விடுபடலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொடுகுத் தொல்லையா? கற்றாழையை கையில் எடுங்க. முடியை பராமரிக்கும் கற்றாழை என்ன செய்யவேண்டும்!
Next articleகொழுப்பை விரட்டுவது மட்டுமல்ல உடல் பருமனை குறைக்கவும் உதவும் கடுகு!