சளித் தொந்தரவு, மூச்சு உறுப்புகளின் நோய்களை நீக்கும்செயல்திறன் மிக்க வேதிப்பொருள் திப்பிலி!

0

சளித் தொந்தரவு, மூச்சு உறுப்புகளின் நோய்களை நீக்கும்செயல்திறன் மிக்க வேதிப்பொருள் திப்பிலி!

மணமுடைய மெல்லிய தண்டு கொடி வகையை சார்ந்ததும், வெப்பமான பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொங்கன் மற்றும் கேரளாவில் வளரக் கூடிய திப்பிலி எமது நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கின்றது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் நீண்ட சங்கிலி அமைப்புடைய ஹைடிரோகார்பன்கள், மனோ மற்றும் செஸ்க்யூடெர்பின்கள், கெரியோஃபில் லென் போன்றவை காணப்படுகின்றதுடன், பிபிரோலேக்டம் போன்றவையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. நாட்டு மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும் திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள் மற்றும் வலிகளை போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறதுடன், இதன் கனிகளும் வேரும் கூட மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

குடல்புழுவை அகற்றும்

மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப்பொடியாக மிளகுடன் கலந்த திப்பிலி பொடி செயல்படுகின்றதுடன், குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுக்கும் போது, இரத்தப்போக்கு, காய்ச்சல் என்பன குணமடைவதுடன், குழந்தைகளின் குடல் நோயில் புழு நீக்கியாகவும் இத்திப்பிலி செயல்படுகின்றது.

சளித் தொல்லையை குணப்படுத்தும்

தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல் மற்றும் உணவில் சுவையின்மை போன்றவற்றின் போது இதில் சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேளையும் கொடுத்து வரும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலகுவில் குணமடைவதுடன், இதில் சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்து வரும் போதும் சகலவிதமான நோய்களும் நீங்குவதுடன், சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் விக்கல் போன்றனவற்றிற்கு தேனுடன் கலந்த பொடி மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகின்றது.

குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போன்றனவற்றிற்கு திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியனவற்றை சமஅளவில் கலந்த கலவை மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகின்றது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article11.12.2018 இன்றைய ராசிப்பலன் செவ்வாய்க்கிழமை!
Next articleகல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை!