காதுக்குள் எறும்பு சென்று விட்டதா? வெளியேற்ற சூப்பரான வழிமுறை இதோ!

0

நாம் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது, நம்மை அறியாமல், நமது காதுக்குள் எறும்பு போய்விடும் இதனால் நமக்கு காதில் ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ளவே முடியாது.

ஆனால், அந்த எறும்பை சரியான முறையில் நமது காதில் இருந்து வெளியேற்றுவதற்கு சூப்பரான வழி உள்ளது.

காதில் எறும்பு சென்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

நமது காதில் சென்று விட்ட எறும்பு மற்றும் பூச்சிகளை வெளியேற்ற சில எளிய மருத்துவ குறிப்புக்கள் உள்ளது.

நமது காதுக்குள் எறும்பு அல்லது ஏதேனும் பூச்சிகள் நுழைந்து விட்டால், உடனடியாக காதினுள் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும் உப்புக் கரைசல் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு நமது காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

இதனால், நமது காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்படுவதால், அது இறந்து நமது காதை விட்டு வெளியேறிவிடும்.

காதில் எறும்பு சென்று விட்டால் தண்ணீரை ஏன் பயன்படுத்தக் கூடாது?

நமது காதில் எறும்பு சென்று விட்டால், அதற்கு கண்டபடி கையில் கிடைக்கும் குச்சியை எடுத்து காதுக்குள் சொருகுவது மற்றும் தண்ணீரை காதில் ஊற்றுவது இது போன்ற செயல் முறைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் காதில் பூச்சுகள் சென்று விட்டால், அதற்கு நாம் வெறும் தண்ணீரை ஊற்றினால், பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன், தண்ணீரிலும் சில பூச்சிகளுக்கு கிடைக்கும். இதனால் சில பூச்சிகள் இறக்காமல், நமது காதினுள் பெரிய அளவிலான ஆபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறது.

மேலும் இந்த செயல்பாட்டினால், நமது காதில் ஏற்படும் வலிகள் மட்டுமே மிஞ்சும் தவிர, நமது காதில் சென்ற எறும்பு வெளியில் வராமல் அப்படியே இருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்!
Next articleஏசி அறையில் ஏன் தூங்கக் கூடாது என்று தெரியுமா?