உலகில் வாழ்வதற்கு செலவு அதிகம் ஆகும் நகரங்களின் டாப் 10 பட்டியல்! முதலிடம் பிடித்த நகரம்!

0

உலக அளவில் வாழ்க்கை நடத்த அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.

எக்கனாமிக் இன்டெலிஜென்ட் என்னும் சர்வதேச தனியார் அமைப்பு, ஆண்டுதோறும் 180 நாடுகளில் உள்ள நகரங்களின் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவச் செலவு, கல்வி,

போக்குவரத்து போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளில் பல கட்ட ஆய்வை மேற்கொண்டு, வாழ்க்கைச் செலவு அதிகமுள்ள மற்றும் குறைந்த நகரங்களின் பட்டியலை வெளியிடும்.

இந்த ஆண்டுக்கான பட்டியலை குறித்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் இடம் வகிக்கும் சிங்கப்பூர், தொடர்ந்து இந்த வருடமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பூரைத் தொடர்ந்து இந்த வருடம் மேலும் பாரிஸ், ஹாங்காங் நகரங்களும் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நான்காவது இடத்தையும், ஜெனிவா ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் 10-வது இடத்தில் உள்ளது.

செலவுகள் குறைந்த நகரங்களின் பட்டியலில் வெனிசுலாவில் உள்ள கரகாஸ் நகரம் முதல் இடத்தையும்; சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரம் இரண்டாவது இடத்தையும்; உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கந்து நகரம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்! காதலனின் கண்ணீர் பதிவு!
Next articleபாசக்கார மனைவியின் மோசமான செயல்! புருஷன் எடுத்த அதிரடி முடிவு! குடும்ப பெண் செய்யும் வேலையா இது!