கண்களை வைத்தே உடல் ஆரோக்கியத்தை கண்டறியலாமாம்! எப்படி தெரியுமா?

0

புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்ற மனிதனின் கண்கள் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது. அதாவது, கண்ணில் உள்ள ஒரு திறப்பாகிய ஒளியை பெற்று கொள்வதற்கு தகுந்தபடி சுருங்கி, விரிவடையும் திறன் கொண்ட கண்மணி ஒரு பூதக்கண்ணாடி போன்று செயற்படுகின்றதுடன், உலகின் அதிசயங்களையும் விந்தைகளையும் நாம் விழித்திரை என்னும் மெல்லிய உறுப்பின் மூலமே கண்ணால் காண்கின்றோம்.

எமது கண்கள் உலகின் ஜன்னல்கள் போன்று நாம்; ஒவ்வொரு நாளும் செயல்படுவதற்கு பார்வையளித்து பெரும் பங்காற்றுகிற அதேவேளை கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போது, அது எமது; உடலுக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளதனால் எமது கண்களை பார்த்தே எமது உடலின் ஆரோக்கியங்களை நாம் தீர்மானிக்க முடியும். இது எவ்வாறு சாத்தியமாகும் என்பதனை கீழே நோக்குவோம்.

மங்கலான பார்வை

தற்போது எல்லா வயதினரிடையேயும் காணப்படக் கூடிய கண் எரிச்சல் மற்றும் மங்கலான பார்வை பிரச்சினையானது, கணினி மற்றும் செல்போன் போன்ற சாதனங்களை தொடர்ச்சியாக பார்ப்பதனால்; ஏற்படுகின்றது. எனவே காலந்தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு சம்மந்தமான அலோசனைகள் பெறுவது நல்லது. இல்லையென்றால் இதன் மூலம் ஏனைய வேறு பிரச்சனைகள கூட ஏற்பட முடியும்.

கண்கள் மேகமூட்டமாக தெரிந்தால்

கண்கள் மேகமூட்டமாக தெரிதல் நீரிழிவு நோயிற்கான ஒரு அறிகுறியாக உள்ளதுடன், இது கண்களின் ரெட்டினா (retina) வை பாதிக்கும் தன்மை கொண்டதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் மருத்துவ பரிசோதனை குறிப்பிட்ட கால அளவில் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் இது பக்கவாதம் வருவதற்கான முக்கியமான அறிகுறியாக காணப்படுவதனால் பார்வை குறைதல் அல்லது ஒன்றுமே தெரியாமல் போனாலோ தாமதிக்காமல் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும்.

கண்களில் நிரந்தர கட்டி

ஒருவருக்கு கண்களில் நிரந்தரமாக கட்டி காணப்படுமாயின் அது Sebaceous Gland Carcinoma என்னும் தோல் நோய் சம்மந்தமான அறிகுறி ஆகும்.

இள மஞ்சள் நிற கண்கள்

பொதுவாக கண்களின் நிறம் மஞ்சளாக காணப்பட்டால் அது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாக கருதப்படுகின்ற அதேவேளை, பித்தப்பை நாளங்களில் எதாவது பிரச்சனை காணப்பட்டால் கூட கண்கள் நிறம் மஞ்சளாக இருக்கும்.

கண் இமை உதிர்தல்

வயது முதிர்வு, மன அழுத்தம், ஊட்டசத்து குறைபாடு குறிப்பாக தைராய்டு சுரப்பிக் குறைபாடு போன்ற பல காரணங்களால் கண் இமை உதிரம். எனவே காலந்தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தைராய்டு சம்மந்தமான அலோசனைகள் பெறுவது நல்லது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎந்த ராசிக்காரர்கள் எவ்வித நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியுமா?
Next articleஇன்றைய ராசிபலன் 5.4.2018