விசம் அருந்தியவர்களின் விசத்தை போக்கி உயிர் பிழைக்க வைக்கும் கடுகு என்பது உங்களுக்கு தெரியுமா? கடுகு பற்றிய இன்னும் பல மருத்துவ‌ தகவல்கள்!

0

நமது வீட்டு அடுக்களையில் இருக்கும் ஓர் சிறிய பொருள் தான் இந்த கடுகு. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்று சொல்வதுண்டு. இந்த சின்னஞ்சிறிய கடுகில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? கடுகில் உயர்தர சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் அடங்கியுள்ளன. கடுகில் காணப்படும் சல்பர் மற்றூம் அப்லோ டாக்ஸின் போன்றவை நச்சுத்தன்மையை நீக்கும் பண்புகொண்டது.

கடுகில் காணப்படும் மருத்துவ பண்புகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்!

விஷத்தை கட்டுப்படுத்தும் தமை நிறைந்தது கடுகு: தற்கொலை செய்யும் எண்ணத்தோடு விஷம் அல்லது பூச்சி மருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் அளவு கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்பட்டு விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

சமிபாட்டை அதாவது ஜீரணத்தை தூண்டுவதற்கு கடுகு பெரிதும் உதவுகிறது தினமும் காலையில் கடுகு, மிளகு, மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டு பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கிவிடும்.

மூட்டுவலி மற்றும் அடிபட்டு இரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறைவதோடு கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலி நீங்கி நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்களில் சில்லிட்டு குளிரால் விறைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

ஆஸ்துமா மற்றும் கபம் குணமடைய தேனில் கடுகை அரைத்து கொடுக்க உண்ணவேண்டும்.

தீராத தலைவலியால் அவஸ்தை படுபவர்கள் கடுகு மற்றும் மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

அடிக்கடி விக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்திவர குணம் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்த கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெயை பயன்படுத்த வேண்டும். கடுகில் பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇதயத்தில் வீக்கம் வலி கை கால் நடுக்கம் உள்ளவர்கள் திராட்சையை இப்படியான முறையில் சாப்பிடுங்கள்! திராச்சையின் மருத்துவ‌ குணங்கள்!
Next articleதினமும் சுவாமிக்கு விள‌க்கு ஏற்ற மறக்காதீர்கள். விளக்கு வழிபாடு செய்யும் முறை! சுவாமி விள‌க்கை அணைப்பது எப்படி!