எல்பிட்டிய – நுகதோட்ட பகுதியில் வாகன திருத்த நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் சந்தேக நபரால் துப்பாக்கி உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதி நவீன தொல்நுட்பத்துடன் கூடிய துப்பாக்கி உற்பத்தி காணொளிகளை பார்வையிட்டு, அதேபோன்று துப்பாக்கிகளை குறித்த நபரால் உருவாக்க முடியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்டுள்ள துப்பாக்கிகள் எவரிடம் வழங்கப்பட்டுள்ளது என விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, குருந்துகஹா – ஹெதேப்ம பகுதியில் 17, ரி-56 ரக ரவைகளை உடமையில் மறைத்து வைத்தவாறு வீதியில் பயணித்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




