இன்று காலை யாழ் வீதியில் நடந்த பெரும் துயரம்! பதறி ஓடிய மாணவிகள்!

0

யாழ்ப்பாணம் – கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் மீது முச்சக்கர வண்டியொன்று மோதுண்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் கொட்டடி – ஒஸ்மானியக் கல்லூரி வீதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உட்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபரான முச்சக்கர வண்டி சாரதி வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடன் பொதுமக்கள் முரண்பட்டதுடன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதில் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் ஒரு மணித்தியாலம் குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் பொது மக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் சாரதியை சிசிடிவி கமரா உதவியுடன் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியூரில் வசித்த பிள்ளைகள்! மகன் வயது இளைஞருடன் பழகிய விதவை பெண்! நேர்ந்த விபரீத சம்பவம்!
Next articleமூச்சு விட முடியலையா தூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்!