இந்த பூக்களை 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து சாப்பிட்டால்!

0

பழங்கள் என்றாலே அதில் அதிக சத்துக்கள் இருக்கும். உடலுக்கும், மேனிக்கும் தீங்கு விளைவிக்காதது. ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

வெள்ளைப்படுதல்

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

உடல் சூடு

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

தலைவலி

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும். பசுமை இலைகளை அரைத்து பசையாக்கப்பட்டு கண் மீது தடவினால் கண் நோய் குணமாகும். இலைச்சாறு வயிற்றுப்போக்கினை தீர்க்கும். தண்டு மற்றும் வேர்பட்டை வயிற்றுப்புழுக்களுக்கு எதிரானது. தசை இறுக்கும் தன்மை கொண்டது.

இருமல்

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மலச்சிக்கல்

மாதுளம் பழம் மலச்சிக்கலைப்போக்கும். வறட்டு இருமல் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம். பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும். எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை அளிக்கும் சக்தி இதற்கு உண்டு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிரல் நுனி பற்றி அறியப்படாத உண்மைகள்!
Next articleகாண்டம் பயன்படுத்துகிறீர்களா அப்படியானால் இதை தெரிந்து கொள்ளுங்கள்.