ஆஸ்துமா, இரத்த அழுத்தம் குறைய உதவும் சீத்தாப்பழம்!

0

சீத்தாப்பழம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், அதனுள் உள்ள தசைப்பகுதி மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. இப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மில்க் ஷேக், ஸ்மூத்தி செய்தும் சாப்பிடலாம்.

மேலும் பால் மூலம் கிடைக்கும் சத்துக்கள் எல்லாம் இந்த பழத்தில் கிடைக்கிறது.

ஆரோக்கியமான சருமம் மற்றும் தலைமுடி வேண்டுமானால் அதற்கு சீதாபழம் உதவும். இவை ஸ்கால்ப் மற்றும் சருமத்தின் ஈரப்பசையைப் பராமரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே கிடைக்கும் போது தவறாமல் இப்பழத்தை சாப்பிடுங்கள்.

ஆரோக்கியமான எடை
நீங்கள் எடையை அதிகரிக்க நின்னைதால் இப்பழம் மிகவும் உதவும். சீதாப்பழத்தை அரைத்து தேன் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான கலோரி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

கருவின் வளர்ச்சி
கர்ப்பிணிகள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால், கருவில் வளரும் குழந்தையின் மூலை, நரம்பு மண்டலம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவை வலிமையடையும். மேலும் இப்பழம் கருச்சிதைவு மற்றும் பிரசவ வலி நீண்ட நேரம் இருப்பதைத் தடுக்கும்.

ஆஸ்துமாவைத் தடுக்கும்
இப்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால், இவை மூச்சுக்குழாயில் உள்ள புண்களைக் குறைக்கும். மேலும் இது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்ற பழம்.

செரிமானத்தை அதிகரிக்கும்
சீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது செரிமானத்திற்கு நல்லது. மேலும் இப்பழத்தை அடிக்கடி உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இரத்த அழுத்தம்
பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்த இப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். உங்களுக்கு இரத்த அழுத்த ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், இப்பழத்தை தினமும் உட்கொண்டு வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெல்வம் நிலைக்க வீட்டில் செய்யவே கூடாத காரியம்!
Next articleஉடல் எடையை விரைவாக குறைக்க அன்னாசிப்பழம் சாப்பிடலாமா! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!